வராத கரெண்டுக்கு பில்லு மட்டும் கரெக்ட்டா வந்துடுது : தமிழக அரசை விமர்சித்து பிரபல நடிகை ட்வீட்.. வைரலாகும் பதிவு!
Author: Udayachandran RadhaKrishnan22 April 2022, 9:57 pm
தமிழகத்தில் கோடை காலத்தில் வெயில் சுட்டெரித்து வருவதால் வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.குறிப்பாக இரவு நேரங்களில் போதுமான காற்றோட்டம் இல்லாமல் புலுக்கமாகவே காணப்படுகின்றனர்.
இந்த நிலையில், கோவை, திருவள்ளூர், திருவாரூர், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இரவு நேரங்களில் தொடர் மின் வெட்டு என்பது தீர்க்க முடியாத பிரச்சனையாகவே உள்ளது. இதனால் மக்கள் புலுக்கம் தாங்க முடியாமல் கொசு கடியில் மக்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர்.
தொடர்ந்து, மின்வெட்டு காரணமாக தினந்தோறும் பள்ளி மாணவர்கள் வீட்டு பாடங்களை கற்பதில் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஒரு வாரமாக இருளில் சிக்கி தவிக்கும் மக்கள் தங்கள் வீட்டில் மெழுகு வர்த்தி விளக்கை பயன்படுத்தி கொண்டு முன்னோர் காலத்தில் இருந்த வாழ்க்கைக்கு சென்றுள்ளனர்.
தமிழகத்தில் தொடர் மின்வெட்டுக்கு எதிர்க்கட்சிகள் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களல் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை கஸ்தூரி ஆளும் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வராத கரெண்டுக்கு பில்லு மட்டும் கரெக்ட்டா வந்துதுடுது, ஒண்ணுமே புரியல..விடியல் மாடல் என கடுமையாக சாடியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.