யார் பெரிய ரவுடி : பழிக்கு பழி தீர்க்க பிரபல ரவுடி டபுள் ரஞ்சித் கொலை… சென்னையில் நடந்த பகீர் சம்பவம்.. திடுக்கிடும் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 March 2022, 8:46 pm

சென்னை : பிரபல ரவுடி கொலை வழக்கில் யார் பெரிய ரவுடி என்பதில் ஏற்பட்ட மோதலால் கொலை நடந்தது தெரியவந்துள்ளது.

சென்னை வில்லிவாக்கம் பாரதி நகரை சேர்ந்த டபுள் ரஞ்சித். ரடிவயான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் 10ம் தேதி மாலை நியூ ஆவடி சாலையில் வைத்து டபுள் என்ற ரஞ்சித்தை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரி வெட்டி கொலை செய்தது.

கடந்த 2020ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட கருணாகரன் என்பவரது கொலைக்கு பழிக்கு பழி தீர்க்க அக்கொலையில் தொடர்புடைய வில்லிலாக்கம் பாரதி நகரை சேர்நத் அலெக்ஸ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொலை செய்யப்பட்டார்.

அலெக்ஸ் கொலை வழக்கில் டபுள் ரஞ்சித்தும் ஒரு குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன் பிணையில் வெளியே வந்துள்ளார்.

இந்த நிலையில் அலெக்ஸ் கொலைக்கு பழி தீர்க்கவே அவனது கூட்டாளிகளால் தற்போது டபுள் ரஞ்சித் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளை கைது செய்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் காத்திருந்தது. டபுள் ரஞ்சித் மீது 2 கொலை வழக்கு உட்பட 7 வழக்குகள் இருந்தது. வில்லிவாக்கம் பகுதியில் யார் பெரிய ரவுடி என ரஞ்சித் கூட்டாளிகளுக்கும் எதிர்தரப்பில் செல்வம் என்கிற சொட்ட செல்வம், கார்த்திக், உதயகுமார், ராதாகிருஷ்ணன், சீனிவாசன் , ஜெயகாந்தன், தினேஷ், பத்மநாபன் விமல் ஆகியோருக்கு முன்விரோதம் இருந்தது.

இந்தநிலையில் புதன்கிழமை ரஞ்சித், சொட் செல்வத்தை தாக்கியதில் வலது கை தோள்பட்டையில் பலத்த காயமடைந்துள்ளார். இதனால் கோபமடைந்த செல்வத்தின் கூட்டாளிகள் ஒன்று சேர்ந்து சதி திட்டம் தீட்டினர்.

திட்டத்தின் படி ரஞ்சித் வீட்டிற்கு சென்ற கார்த்திக், ரஞ்சித்தை அழைத்த போது அவர் வீட்டில் இருந்த தாய், என்ன வேண்டும் என கேட்க, ரஞ்சித் கடைக்கு அழைத்து செல்ல வந்ததாக கூறியுள்ளார்.

இதையடுத்து ரஞ்சித் தனது சகோதரியின் இருசக்கர வாகனத்தை எடுத்து கார்த்திக் பேச்சை கேட்டு நியூ ஆவடி சாலையில் சென்றுள்ளார். அப்போது கார்த்தி நண்பர்கள் அங்கு காத்திருந்தனர். பின்னர் ரஞ்சித்துடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் செல்வத்தின் கூட்டாளிகள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரஞ்சித்தை சரமாரியாக வெட்டினர்.

இதில் சுதாரித்துக்கொண்ட ரஞ்சித் தப்ப முயன்றபோது காட்டான் கார்த்தி அரிவாளால் டபுள் ரஞ்சித்தை சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பித்து சென்றனர். இதையடுத்து சிசிடிவி காட்சிகள் வைத்து விசாரித்த வில்லிவாக்கம் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க முயற்சித்த போது உதயா, காட்டான் என்கிற கார்த்திக், சீனு என்கிற சீனிவாசன் தப்பி செல்ல முற்பட்ட போது மதில் சுவர் மீது ஏற முயற்சித்து கீழே விழுந்து கை கால் முறிவு ஏற்பட்டது.

உடனே தனிப்படை போலீசார் அவர்களை பிடித்து காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இதனிடையே ரஞ்சித்தின் தாய் அளித்த புகாரின் பேரில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…