குஷ்பு, நமீதாவைத் தொடர்ந்து பிரபல நடிகைக்கு கோவில் கட்டிய தீவிர ரசிகர்… நடிகையின் பிறந்த நாளன்று திறக்க உள்ளதாக தகவல்..!!

Author: Babu Lakshmanan
27 April 2023, 1:56 pm

குஷ்பு, நமீதா, நயன்தாரா ஆகியோரைத் தொடர்ந்து மற்றொரு முன்னணி நடிகைக்கு ரசிகர் ஒருவர் கோவில் கட்டிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

பொதுவாக சினிமா நடிகைகள் மீதான அதீத அன்பால் அவர்கள் பெயரை பச்சை குத்துவதும், பெயர்களை வைத்துக் கொள்வதையும் கடந்து, கோவில் கட்டுவதை வாடிக்கையாகி விட்டது.

அந்த வகையில், குஷ்பு, நமீதா, நயன்தாரா போன்ற நடிகைகளுக்கு கோவில் கட்டிய சம்பவங்கள் அரங்கேறி இருந்தன. அண்மையில் கூட நிதி அகர்வாலுக்கு சென்னையில் உள்ள ரசிகர்கள் கோவில் கட்டியிருந்தனர்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் இன்று இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கிறார் என்றால் அதற்கு அவரது கடின உழைப்பே காரணம். எந்தவித சினிமா பின்புலமும் இன்றி சொந்த முயற்சியால் முன்னேறி முன்னணி நடிகை என்கிற அந்தஸ்த்தை பெற்றிருக்கிறார் சமந்தா. இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

அந்த வரிசையில், தற்போது நடிகை சமந்தாவும் இணைந்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த நடிகை சமந்தாவின் தீவிர ரசிகரான தெனாலி சந்தீப் என்பவர் தான் தற்போது நடிகை சமந்தாவுக்காக கோவில் ஒன்றை கட்டி உள்ளார். பிரதியுஷா அறக்கட்டளை மூலம் செய்துவரும் பல்வேறு சமூக நலப்பணிகளால் ஈர்க்கப்பட்டு இதனை செய்ததாக சொல்லியுள்ளார்.

அவர் ஆந்திர மாநிலம் பாபட்லாவில் உள்ள ஆலபாடு என்கிர கிராமத்தில் இந்த கோவிலை கட்டி உள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 539

    0

    0