நிலத்தை காக்க போராடிய விவசாயிகளுக்கு அநீதி ; திருமாவளவன், கேஎஸ் அழகிரி உள்ளிட்டோர் எங்கே..? பாஜக கேள்வி

Author: Babu Lakshmanan
17 November 2023, 2:36 pm

விவசாயிகளுக்கு அநீதி நடந்து வரும் நிலையில், திமுக கூட்டணி கட்சி தலைவர்களான கேஎஸ் அழகிரி, கே.பாலச்சந்திரன், திருமாவளவன் உள்ளிட்டோர் எங்கே போனார்கள் என்று பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை உள்ளிட்ட கிராமங்களில், சிப்காட் விரிவாக்கத்திற்காக அரசு சார்பில் சுமார் 3,600 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. அரசின் இந்தப் பணிகளுக்கு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், கோட்டாட்சியரை சந்தித்து முறையிட, பேரணியாக சென்றனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்தனர்.

இதை கண்டித்து சாலை மறியல் நடைபெற்ற நிலையில், கைது செய்யப்பட்டவர்களை விடுவித்த போலீசார், கடந்த 4ம் தேதி நள்ளிரவில் சிப்காட் எதிர்ப்பு போராட்டக் குழு பிரதிநிதிகள் உள்ளிட்ட 20 பேரை கைது செய்து வேலூர், புழல், பாளையங்கோட்டை, கடலூர் உள்ளிட்ட சிறைகளில் அடைத்தனர்.

இதனிடையே, போராட்டக் குழு பிரதிநிதிகளான பச்சையப்பன், தேவன், அருள், திருமால், சோழன் உள்ளிட்ட 7 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டதைக் கண்டித்து பாஜக சார்பில் நாளை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளளது.

இந்த நிலையில், விவசாயிகளுக்கு அநீதி நடந்து வரும் நிலையில், திமுக கூட்டணி கட்சி தலைவர்களான கேஎஸ் அழகிரி, கே.பாலச்சந்திரன், திருமாவளவன் உள்ளிட்டோர் எங்கே போனார்கள் என்று பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- எட்டு வழி சாலை, நெடுவாசல் விவகாரங்களில் துள்ளிக்குதித்து கொந்தளித்த கேஎஸ் அழகிரி, கே.பாலச்சந்திரன், திருமாவளவன், வேல்முருகன், முத்தரசன் ஆகிய அனைவரும் இப்போது திருவண்ணாமலையில் அமைதியாக போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்த போது காணவில்லை, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 334

    0

    0