டோல் கட்டணம் ; இன்று முதல் வரவிருக்கும் புதிய ரூல்ஸ்; வாகன ஓட்டிகள் சீக்கிரம் பண்ணிடுங்க…!!

Author: Sudha
1 August 2024, 7:43 am

டோல் கட்டணம் செலுத்தவும் மற்றும் டோல் கேட்டுகளில் நெரிசலைக் குறைக்கும் விதமாகவும் FASTag-க்கான புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல் படி, KYC அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிகள் என்ன என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகள் பழமையான FASTags மாற்ற வேண்டும்.

3 வருட FASTags-க்கான KYC புதுப்பிப்பு

வாகன பதிவு எண் மற்றும் சேஸ் எண்ணை FASTag உடன் இணைத்தல்.

புதிய வாகனம் வாங்கிய 90 நாட்களுக்குள் பதிவு எண்ணை புதுப்பித்தல்.

FASTag வழங்குநர்கள் தங்கள் தரும் டேட்டாவை சரிபார்க்க வேண்டும்.

காரின் முன் மற்றும் பக்க புகைப்படங்களை தெளிவாக பதிவேற்றம் செய்தல்

FASTag ஒரு நிரந்தர மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும்.

KYC தொடர்பான தேவைகளை அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் நிறைவு செய்திடல் வேண்டும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

செயல்பாட்டிற்கு வந்துள்ள இந்த புதிய நடைமுறைகளின் மூலம் டோல் கட்டணம் செலுத்தும் செயல்முறை இன்னும் துரிதம் அடைந்து, போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 215

    0

    0