லாரி மீது மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார்…சுற்றுலா சென்ற தந்தை-மகன் பலி: தாய், மகளுக்கு தீவிர சிகிச்சை..!!

Author: Rajesh
8 April 2022, 10:37 pm

திண்டுக்கல்: கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் காரில் சுற்றுலா சென்ற போது லாரி மீது மோதியதில் தந்தை மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவர் அதே பகுதியில் மருந்துக்கடை நடத்தி வந்தார். செந்தில் தனது மனைவி யசோதா, மகன் பிரகாஷ், மகள் சபி பிரபா ஆகியோருடன் இன்று காலை திருவண்ணாமலையில் இருந்து கிளம்பி கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்காக காரில் சென்றனர். காரினை பிரகாஷ் ஓட்டி வந்துள்ளார்.

இவர்களது கார் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் மேம்பாலத்தில் கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற சரக்கு லாரியின் பின்பகுதியில் திடீரென்று பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது.

விபத்தில் கார் ஓட்டிய பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் செந்தில் உயிரிழந்தார். யசோதா மற்றும் சிரியா ஆகிய இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 1268

    0

    0