ராணிப்பேட்டை மாவட்டம் ஏரிக்கரை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராணிப்பேட்டையை சேர்ந்த ஏழுமலை என்பவர் தன் மகன் சக்திவேலுடன் சந்தேகத்திற்கும் இடமளிக்கும் வகையில் வந்ததால் அவரைப் பிடித்து போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையில் சக்திவேல் அணிந்திருந்த பேண்ட் பாக்கெட்டில் இருந்து 4 சவரன் நெக்லஸ் மற்றும் இரண்டரை சவரன் தங்க நகைகளை போலீசார் கைப்பற்றினர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரிடமும் துருவித் துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில், சுற்றுவட்டார பகுதியிலுள்ள வீடு மற்றும் கோயில்களில் தந்தையும் மகனும் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது.
மேலும், திருடிய நகைகளை ராணிப்பேட்டை பாலாற்றுப் பாலத்தின் கீழ் பிளாஸ்டிக் பையில் வைத்து புதைத்ததையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதேபோல், வேறு சில இடங்களிலும் திருடிய பொருட்களை புதைத்து வைத்துள்ளதாக தந்தை மகன் இருவரும் வாக்குமூலம் அளித்த நிலையில், இருவரையும் நேரில் அழைத்துச் சென்று 28 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் தந்தையையும் மகனையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, திருட்டிற்கு உடந்தையாக இருந்த பாபா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.