மிகச்சிறந்த அறிவாளி;20 வயது கிட்சன் வொர்க்கர்; அமைதியானவர்; ட்ரம்பை சுட்டவரை பற்றி வெளியான தகவல்,..

அமெரிக்காவில் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது அதிபர், துணை அதிபர் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர் இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் நேற்று ட்ரம்ப் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கியால் சுடப்பட்ட ட்ரம்ப்பை பாதுகாப்பு வீரர்கள் வேகமாக அழைத்துச் சென்றனர்.அப்போது டிரம்ப் கைகளை உயர்த்தி ஃபைட் ஃபைட் ஃபைட் என முழங்கினர் இதை கண்ட பொதுமக்கள் USA USA USA முழங்கினார்கள்.

ட்ரம்ப்பை சுட்டவரை பற்றிய பல தகவல்கள் இப்போது வெளிவந்துள்ளது.
சனிக்கிழமையன்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எதிரான தாக்குதலில் தொடர்புடைய நபர் 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு சம்பவ இடத்திலேயே அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.FBI அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவர் பெயர் க்ரூக்ஸ் என்று அறிவித்தனர்.

அவர் டிரம்ப் தனது பேரணியை நடத்திய பட்லருக்கு தெற்கே 35 மைல் தொலைவில் உள்ள பென்சில்வேனியாவின் பெத்தேல் பூங்காவில் வசிப்பவர் என்று கண்டறியப்பட்டது.

பேரணியின் பாதுகாப்பு எல்லைக்கு வெளியே அருகிலுள்ள கட்டிடத்தின் கூரையின் மீது அமர்ந்து, ட்ரம்ப் மீது அவர் சுட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் பேரணியில் கலந்து கொண்ட ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். டிரம்ப் காயமடைந்தார்,

சமூக ஊடகங்களில் அவருடைய காதின் மேல் பகுதியில் ஒரு தோட்டாவால் தாக்கப்பட்டதாக புகைப்படம் வெளியானது.

துப்பாக்கிச் சூட்டின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் ஏஜென்சி இணையதளம் மூலம் தங்களிடம் உள்ள எந்தவொரு தகவலையும் சமர்ப்பிக்குமாறு பொதுமக்களை FBI வலியுறுத்தியுள்ளது.

க்ரூக்ஸ் 2022 இல் பெத்தேல் பார்க் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றுள்ளார்.

பென்சில்வேனியாவின் வாக்காளர் தரவுத்தளத்தில் உள்ள தகவல் அவர் குடியரசுக் கட்சியின் மீது அபிமானம் கொண்டவர் என சொல்கிறது.

ஜனாதிபதித் தேர்தல் அவர் வாக்களிக்க போதுமான வயதை அடைந்த முதல் தேர்தலாக இருந்திருக்கும். அவர் குடியரசுக் கட்சிக்கு ஜனவரி 2021 இல் தன்னுடைய 17 வயதில் $15 நன்கொடையாக அளித்துள்ளார்.குடியரசு கட்சி மீது இவ்வளவு அபிமானம் உடையவர் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப்பை கொல்ல முயன்றது ஏன் என்பது தெரியவில்லை.

க்ரூக்ஸின் தந்தை, மத்தேயு க்ரூக்ஸ், “என்ன நடக்கிறது” என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்திருக்கிறார், ஆனால் அவரது மகனைப் பற்றி பேசுவதற்கு முன்பு “நான் சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் பேசவேண்டும் அதுவரை காத்திருப்பேன்” என்றார்.

பென்சில்வேனியாவில் உள்ள சிறிய பிட்ஸ்பர்க் புறநகர் பெத்தேல் பார்க், தாமஸ் மேத்யூ க்ரூக்ஸை பிரச்சார பேரணியின் போது டொனால்ட் டிரம்பை சுட்ட நபராக FBI அதிகாரிகள் அறிவித்ததை அடுத்து, அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

20 வயது சமையல் தொழிலாளி, ஒரு அமைதியான இளைஞன் எப்படி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டான் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Sudha

Recent Posts

மகனாக வளர்ந்த தம்பி.. சைகை மொழியால் கொடுமையைச் சொன்ன அக்கா.. வேலூரில் பரபரப்பு!

வேலூரில், மாற்றுத்திறனாளிப் பெண்ணை உறவினரான இளைஞரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்: வேலூர் மாவட்டம்,…

47 minutes ago

உங்க வேலைய மட்டும் பாருங்க…ரசிகர்களுக்கு ரூல்ஸ் போட்ட இயக்குனர் எச்.வினோத்.!

ரசிகர்கள் செய்வது மிக தவறு தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் எச் வினோத்,இவர் இயக்கிய…

2 hours ago

முதலிரவில் மனைவி சொன்ன ரகசியம்.. ஜூஸில் விஷம்.. சிகிச்சையில் கணவர்!

கடலூரில், வேறு ஒருவரைக் காதலித்த நிலையில், திருமணம் முடித்த கணவருக்கு, மனைவி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…

2 hours ago

தரமான சம்பவம்…விஜய் ரெக்கார்டை தூக்கி வீசிய ‘குட் பேட் அக்லி’.!

ட்ரெண்டிங் NO1-ல் குட் பேட் அக்லி ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர்…

2 hours ago

ஆண் நண்பரை கட்டிப்பிடித்து போட்டோ… ரச்சிதா மகாலட்சுமியால் ரசிகர்கள் ஷாக்!

சின்னத்திரை மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இவர் சக சீரியல் நடிகரை திருமணம்…

2 hours ago

18 நாட்கள் செல்போனில் சிக்கிய பேராசிரியர்.. முக்கிய நபர் கைதானது எப்படி?

உத்தரகாண்டில் டிஜிட்டல் அரஸ்டில் 18 நாட்கள் பேராசிரியர் சிக்கி 47 லட்சத்தை இழந்தது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

3 hours ago

This website uses cookies.