பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய பெண் வேடம் : வெளுத்தது சாயம்… தொக்கா சிக்கிய நபர்!!
Author: Udayachandran RadhaKrishnan8 July 2023, 1:26 pm
பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய பெண் வேடம் : வெளுத்தது சாயம்… தொக்கா சிக்கிய நபர்!!
கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே பெண்களுக்கான இலவச பேருந்து சேவை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், பல்வேறு பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடக அரசு இலவச பேருந்து சேவையை பயன்படுத்த விரும்பி வீரபத்திரையா என்பவர் புர்கா அணிந்து சென்றுள்ளார்.
நீண்ட நேரம் பேருந்து நிறுத்தத்தில் அவர் நின்று கொண்டிருந்ததை பார்த்தவர்கள், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் யாசகம் எடுப்பதற்காக புர்கா அணிந்ததாக கூறியுள்ளார். பின் இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்று எச்சரித்து அவரை அனுப்பி வைத்துள்ளனர்.