பிரபல பாடகருடன் காருக்குள் போதையில் தள்ளாடிய ஆளுங்கட்சி பெண் எம்பி.. வெளியான ஷாக் தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
5 October 2024, 11:04 am

ஆளுங்கட்சியை சேர்ந்த பெண் எம்பி பிரபல பாடகருடன் காரில் போதையில் தள்ளாடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அந்த பெண் எம்பி வேறு யாருமில்லை, பாஜக அனுதாபியான நடிகை கங்கனா ரணாவத். தன் மனதில் தோன்றும் எதையும் பட்டென சொல்லக் கூடியவர் நடிகை கங்கனா.

பாலிவுட் மட்டுமல்லாமல் கோலிவுட்டிலும் ஒரு சில படங்களில் நடித்த கங்கனா, விவசாயிகள் போராட்டதத்தை பற்றி கொச்சையாக பேசியது சர்ச்சையானது.

கங்கனாவை சுற்றி பல சர்ச்சைகள் இருந்தாலும், பாஜகவுக்கு தனது ஆதரவான நிலைப்பாட்டையே வைத்திருந்தார். இதனால் அவருக்கு பாஜக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது.

கடந்த மக்களவை தேர்தலில் இமாச்சல் மண்டி தொகுதியில் எம்பி பதவிக்கு க்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதையும் படியுங்க: ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம்.. தலையில் சுமந்து காணிக்கை செலுத்திய முதலமைச்சர்..!!

தற்போது எமர்ஜென்சி படத்தில் நடித்து வரும் அவர், சீக்கியர்கள் அல்லாதவர்கள் சீக்கியர் துப்பாக்கியில் சுடுவது போன்று காட்சிகள் படத்தி உள்ளதால் அதை நீக்க முடியாது என கங்கனா பிடிவாதம் காட்டி வருகிறார்.

இதனால் தற்போது சென்னசார் போர்டு பிடியில் இந்தப் படம் சிக்கியுள்ளது. இந்த நிலையில் பஞ்சாப் மக்களை அதிகளவு தாக்கி பேசும் கங்கனா பற்றி உண்மையை நான் சொல்கிறேன் என பிரபல பாடகர் ஜஸ்பிர் ஜாசி பரபரப்பு தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

டெல்லியில் ஒரு நாள் இருந்த போது கங்கனா தனது காரில் அவரது தேழிஹயடன் மதுபோதையில் இருந்தார். சுயநினைவே இல்லாமல், மது, போதைப் பொருட்களுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

யாரும் அப்படி ஒரு போதையை எடுத்துக் கொண்டது மாதிரி இதுவரை நான் பார்த்தில்லை.. அப்படிப்பட்ட கங்கனா, சீக்கியர் பற்றி பேசுவதை நிறுத்தம் வேண்டும், இல்லையென்றொல் உங்கள பற்றி உண்மைகள் வெளியே சொல்ல வேண்டியதிருக்கும் என கூறினார்.

  • Jayam Ravi Aarthi Couple Compromise in Court ஜெயம் ரவி காலில் விழுந்தாரா ஆர்த்தி? ஒரு மணி நேரம் நடந்த சந்திப்பில் சமரசம்!
  • Views: - 215

    0

    0