இலவச டோக்கன் விநியோகித்தும் குறைந்தது பக்தர்கள் கூட்டம் : விடாத மழையால் திருப்பதி திருமலையில் அவதி!!

Author: Udayachandran RadhaKrishnan
1 November 2022, 2:35 pm

திருப்பதி திருமலையில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து அடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாமி தரிசனத்திற்காக வந்திருக்கும் பக்தர்கள் பல்வேறு வகையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக திருப்பதி மலைக்கு வந்திருக்கும் பக்தர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது போன்ற அடிப்படை தேவைகளுக்காக அல்லல்படுகின்றனர்.

மேலும் இலவச தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களும் பல்வேறு வகையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதனிடையே பல்வேறு தரப்பினர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் பணியை தேவஸ்தான நிர்வாகம் இன்று முதல் துவக்கியுள்ளது.

திருப்பதியில் உள்ள பூதேவி கட்டிட வளாகம், விஷ்ணு நிவாஸம் கட்டிட வளாகம், இரண்டாவது சத்திரம் ஆகியவற்றில் தலா 10 கவுண்டர்கள் வீதம் 30 கவுண்டர்கள் அமைக்கப்பட்டு பக்கர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்கும் பணி இன்று முதல் துவங்கி உள்ளது.

எனவே நேற்று இரவு முதல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து டோக்கன்களை வாங்கி செல்கின்றனர். சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் தலா 25 ஆயிரம் டோக்கன்களும் வாரத்தின் மற்ற நாட்களில் தலா 15,000 டோக்கன்களும் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து டோக்கன்களை வாங்கி செல்கின்றனர். ஒரு முறை ஆதார் அட்டையை சமர்ப்பித்து டோக்கன் பெரும் பக்தர் மீண்டும் 30 நாட்களுக்கு பின் மட்டுமே இந்த வசதியை பெற முடியும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு நாளும் காலை முதல் அன்றைய தினம் தரிசனம் செய்வதற்கு உரிய டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும் என்றும் டோக்கன்கள் கிடைக்காத பக்தர்கள் நேரடியாக திருப்பதி மலைக்கு சென்று ஏழுமலையானை இலவசமாக வழிபடலாம் என்றும் அறிவித்துள்ளது.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 472

    0

    0