வழக்கு மேல வழக்கு போடுங்க… முடிந்தால் கைது செய்யுங்க : ஆர்எஸ் பாரதிக்கு சவால்.. அண்ணாமலை பரபர பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 May 2023, 1:46 pm

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சரை தொடந்து திமுக எம்.பி. டி.ஆர். பாலுவும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

நோட்டீஸ் அனுப்பியும் அண்ணாமலை மன்னிப்பு கேட்காததாலும் அடிப்படை ஆதாரமின்றி அவதூறு கருத்துக்களை வெளியிடுவதாகவும் அண்ணாமலை மீது திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17-வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, டி.ஆர் பாலு என்மீது வழக்கு தொடர்ந்திருப்பது நகைப்புக்குரியது. என் மீது தொடரப்பட்ட வழக்குகளை சட்டரீதியாக சந்திப்பேன். வழக்குகளுக்கு பயந்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை நிறுத்த மாட்டேன்.

அமைச்சர் டிஆர்பி ராஜாவின் குடும்பத்தினர் பெரிய நிறுவனங்களை நடத்தி வருவதால் அவருக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பிடிஆர் ஆடியோவை வெளியிட்டது தொடர்பாக என்மீது வழக்கு தொடருங்கள். வழக்கு தொடர்ந்தால் ஆடியோவின் உண்மை தன்மையை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும்.

ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்ற முறைகேடு காரணமாக நாசர் அமைச்சரவையில் இருந்து விடுவிப்பு. பால் விலையை புதிய அமைச்சர் குறைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஆடியோ விவகாரம் தொடர்பாக பிடிஆர் துறை மாற்றப்பட்டது தவறு. இவ்வாறு அவர் கூறினார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ