நிதியமைச்சர் தாக்கல் செய்த 7 வது பட்ஜெட்; முன்னுரிமை அளிக்கப்பட்ட 9 அம்சங்கள்

Author: Sudha
23 July 2024, 1:36 pm

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9 அம்சங்களைக் கொண்ட மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.நிதியமைச்சர் தாக்கல் செய்யும் 7 வது பட்ஜெட் இது.

பீஹார், ஆந்திரா, ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம் மாநிலங்களை மேம்படுத்தி சிறப்புத் திட்டங்கள்

400 மாவட்டங்களில் டிஜிட்டல் முறையில் பயிர் ஆய்வு மற்றும் மதிப்பீடு செய்யப்படும்.

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி ஓதுக்கீடு

ஊரக வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கீடு.

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் கூடுதலாக 3 கோடி வீடுகள்

அடுத்த 2 ஆண்டுகளில் இயற்கை வேளாண்மை செய்ய 1 கோடி விவசாயிகளுக்கு பயிற்சி. கடுகு, நிலக்கடலை, சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க திட்டம்

முதல்முறையாக பணிக்கு செல்பவர்களுக்கு அரசு ஒரு மாத ஊதியத்தை ஊக்கத்தொகையாக வழங்கும் திட்டம்

இலவச சூரிய ஒளி திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகளுக்கு தலா 300 யூனிட் மின்சாரம்

தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 6%குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிப்பு பிளாட்டினத்திற்கான சுங்க வரியும் 6.4 சதவீதமாக குறைப்பு

போன்ற பல அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ