அரசு வழங்கும் நிவாரணத் தொகையை பிச்சை என கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்… மீண்டும் சர்ச்சை!!!
Author: Udayachandran RadhaKrishnan17 March 2024, 11:54 am
அரசு வழங்கும் நிவாரணத் தொகையை பிச்சை என கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்… மீண்டும் சர்ச்சை!!!
நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்ற சாணக்யாவின் 5 ஆண்டு விழாவில், டிடிவி தினகரன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் G.K.வாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல அரசியல் கருத்துக்களை குறிப்பிட்டு பேசினார். குறிப்பாக அவர் பேசுகையில், “வெள்ளம் வந்தால் ரூ.1000, வீடு இடிந்து விழுந்தால் ரூ.500 எனத் தருகிறார்கள். இத்தகைய நடவடிக்கையால் நாடு முன்னேறாது, எப்போது பார்த்தாலும் இன்னொருவர் போடும் பிச்சையில் நாம வாழத் தேவையில்லை” என அரசு வழங்கும் நிவாரணத் தொகையை ‘பிச்சை’ எனக் குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதனை தொடர்ந்து, ஆன்மீகத்திற்கு எதிரான கட்சிகள் ஆளுங்கட்சியாகவோ, எதிர்க்கட்சியாகவோ வந்துவிடக்கூடாது. திராவிட மாடல் ஆட்சியில் தமிழகத்தில் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகமாகிவிட்டது. போதைப் பொருள் ஆட்சியை இப்படியே விட்டு வைக்கப் போகிறீர்களா? எந்த ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு கெட்ட பெயர் வந்துள்ளதோ அதை அகற்ற வேண்டும் என்று பேசியுள்ளார். இது குறித்து தற்பொழுது சமூக வலைத்தளங்களில் விவாதத்தை எழுப்பியுள்ளது.