மதுரை : அரசியலமைப்புக்கு மீறி யார் அளிக்கும் அறிவுரையும் எங்களுக்கு தேவையில்லை என்றும், சர்வாதிகாரமாக வழங்கப்படும் அறிவுரைகளை ஒருபோதும் பின்பற்ற மாட்டோம் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட மத்திய தொகுதிக்குட்பட்ட எஸ்.எஸ்.காலனியில் உள்ள எம்.ஆர்.பி மஹாலில், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு, 586 பயனாளிகளுக்கு ரூ.93,14,596/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது :- இந்திய வரலாற்றில் பொருளாதாரம், சட்டம், மனித வளம் உள்ளிட்ட அனைத்து துறையிலும் மேலாண்மையை உருவாக்கி, உலகத்திலேயே சிறந்த ஆலோசகர்கள் அறிவுரையின் அடிப்படையில் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தனி நபர் அறிவுரை அளிப்பது போல அரசியல் ரீதியாக சிலர் அறிவுரை வழங்கி கொண்டு இருக்கிறார்கள். அரசியலமைப்புக்கு மீறி யார் அளிக்கும் அறிவுரையும் எங்களுக்கு தேவையில்லை. சர்வாதிகாரமாக வழங்கப்படும் அறிவுரைகளை ஒருபோதும் பின்பற்ற மாட்டோம், என்றார்.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஸ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் மாநகராட்சி மேயர், மாநகராட்சி துணை மேயர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
கலவையான விமர்சனம் சீயான் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அமின்பூரில் உள்ள உள்ளூர் ராகவேந்திரா நகர் காலனியில் வசிக்கும் சென்னைய்யா ( 55 )…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புறத்தாக்குடியில் புனித சேவியர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில்…
This website uses cookies.