கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: பதறி ஓடிய நோயாளிகள்: பரபரப்பு…!!

Author: Sudha
18 August 2024, 10:40 am

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில், கரும்புகையுடன்  திடீர் தீ விபத்து ஏற்பட்டது.அதனால் அங்கு பதற்றம் நிலவியது.

உடனடியாக அருகில் இருந்த நோயாளிகள் வேறொரு அறைக்கு மாற்றப்பட்ட நிலையில் இதுகுறித்து மருத்துவ ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் அரை மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.

தீ பரவல் உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் எந்தவித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.பின்னர் தகவல் அறிந்த வந்த கீழ்ப்பாக்கம் போலீசார் தீ விபத்து தொடர்பாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 177

    0

    0