‘நாங்க என்ன திருடர்களா…?’ பேருந்தில் இருந்து இறக்கி மேற்பட்ட மீனவ மூதாட்டி : தமிழகத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்!!
Author: Babu Lakshmanan26 January 2022, 8:34 pm
செங்கல்பட்டு அருகே மீனவப் பெண் மூதாட்டி ஒருவர் மீன் கூடையை பேருந்தில் ஏற்றியதற்காக அரசு நடத்துனரால் இறக்கி விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் மகாபலிபுரம் பேரூராட்சி கொகிலமேடு கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள் (52). இவர் இன்று காலை மீன் வியாபாரத்திற்காக மீன் கூடையை எடுத்துக்கொண்டு மகாபலிபுரம் பேருந்து நிலையத்தில் மகாபலிபுரத்தில் இருந்து தாம்பரம் வரை செல்லக்கூடிய (TN-01-AN -1842) பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது, நடத்துனர் அவர்கள் மீன் கூடையை ஏற்றிக்கொண்டு பேருந்தில் ஏறக்கூடாது என்று கூறி அப்பெண்மணியை வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து இறக்கி விட்டார்.
பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட பெண்மணி தன்னுடைய மனக்குமுறல்களை வெளிப்படுத்தினார். நாங்கள் என்ன அவர் பேசியதாவது :- திருடர்களா??? நாங்கள் பயணச் சீட்டுக்கு பணம் செலுத்த மாட்டோமா??? மாநகரப் பேருந்து ஏழைகளுக்கானது இல்லையா???? வசதி படைத்தவர்கள் தான் செல்ல வேண்டும் என்றால் அப்பேருந்து ஏன் எங்கள் கிராமத்திற்கு வரவேண்டும்??? வசதிபடைத்தவர்கள் பிரயாணம் செய்யும்போது அவர்கள் லக்கேஜ் ஏற்றுவது இல்லையா??? நாங்கள் பணம் செலுத்தத் தயாராக இருக்கும்போது நடத்துனர்கள் ஏன் எங்களை கீழ்தரமாக பார்க்கின்றனர்??? MTC பேருந்தில் மீன் கூடைகளை ஏற்றக் கூடாது என்று அரசு விதி ஏதும் உள்ளதா???, தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.
இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஆகியோர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அரசு நடத்துனர் மீது துறை ரீதியான ஒழுங்கீன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறா வண்ணம் அரசு ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுரை வழங்கி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.