வேறொரு பெண்ணுடன் உல்லாசம்.. மனைவியிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகர் : வைரலாகும் ஷாக் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
1 June 2024, 2:48 pm

கடந்த 2013-ம் ஆண்டு தேஜா மற்றும் நக்ஷத்ரா இருவரும் திரைத்துறையில் பணியாற்றிய போது காதலித்து பின் 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இருவருக்கும் ஒரு பெண் குழந்தையும் இருக்கும் நிலையில் அவர்களது உறவில் சிறுது சிறிதாக பிளவு ஏற்பட்டுள்ளது. மேலும், நக்ஷத்ரா தங்களது உறவில் எந்த ஒரு பெரிய விரிசல் வந்துவிட கூடாதென்று பல முறை தேஜாவை கண்டித்திருக்கிறார்.

ஆனாலும், தேஜா சில புறம்பான விஷயங்களில் ஈடுப்பட்டு வந்ததால் ஆத்திரத்தின் உச்சத்தை இழந்த நக்ஷத்ரா, தேஜா செய்யும் தப்பை ஊடகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்ட முடிவெடுத்துள்ளார்.

இதனால், நக்ஷத்ரா பத்திரிகையாளர்களை தேஜாவின் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றார், அங்கு வேறொரு கம்பெனியில் பணிபுரியும் ஒரு பெண்ணுடன் தேஜா நெருக்கமாக இருந்துள்ளார். அதனை பத்திரிகையாளர்கள் படம் பிடிக்க தொடங்கியுள்ளனர்.

அங்கு கையும் களவுமாக சிக்கிய தேஜாவை கண்ட நக்ஷத்ரா கோபமடைந்து பத்திரிகையாளர்கள் முன்னிலே அழுதுகொண்டே தேஜாவின் முகத்தில் பொருளை தூக்கி எரிந்தும், அவரை தாக்கவும் செய்திருக்கிறார்.

தேஜாவும் பதிலுக்கு நக்ஷத்ராவை தாக்கியுள்ளார் அதுவும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. இதனை குறித்து தேஜாவிடம் கேட்ட பொழுது, நக்ஷத்ராவும் அவரது குடும்பத்தினரும் தன் மீது வேண்டுமென்றே குறை கூறுவதாகவும் தன மீது எந்த தவறும் இல்லை என்றும் மறுத்துள்ளார்.

மேலும், அந்த பெண்ணை குறித்து கேள்வி கேட்கும் போது, அவர் தனது கம்பெனியில் பணிபுரியும் பெண் எனவும் ஒரு திரைப்படம் குறித்து விவாதிக்கவே இங்கு வந்தோம் எனவும் கூறி இருந்தார்.

மேலும் படிக்க: இருளில் மூழ்கிய மக்கள்.. இரவு நேரத்தில் விட்டு விட்டு மின்வெட்டு : வீதியில் இறங்கி போராடிய மக்கள்..!!

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. மேலும், இந்த தம்பதியினரின் விவாகரத்து வழக்கு கடந்த 2021-ம் ஆண்டு முதல் குடும்ப நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கிடைத்த தகவலின் படி காவல் துறையினர் கூறி உள்ளனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 333

    0

    0