மக்களை சந்திக்காத… தேர்தலில் நிற்காதவர்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி? இது என்ன ஜனநாயகமா? சீமான் ஆவேசம்!
Author: Udayachandran RadhaKrishnan28 January 2024, 7:17 pm
மக்களை சந்திக்காத… தேர்தலில் நிற்காதவர்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி? இது என்ன ஜனநாயகமா? சீமான் ஆவேசம்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று மாலை நடைபெறக்கூடிய பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த சீமான் தூத்துக்குடி தனியார் தங்கும் விடுதியில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், நான் தனித்து தான் போட்டியிட போகிறேன், முதல்வர் வெளிநாடு செல்வது தனிப்பட்ட பயணம் இதற்கு முன்பு அந்நிய முதலீட்டை ஈர்க்க செல்கிறேன் என கூறினார். தனிப்பட்ட முறையில் செல்வதை நாம் சொல்ல முடியாது என்றார்.
இந்தியா கூட்டணியில் நிதீஷ் குமார் ராஜினாமா செய்து பாஜகவுக்கு செல்ல இருக்கிறார் பாரதிய ஜனதா தொடர்ந்து ஆட்சி செய்தால் இந்திய கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறுவது போல் இந்தியாவில் உருவாகும் இந்தியாவை துண்டு துண்டாக சிதைத்து விடுவார்கள் இந்தியா சுக்கு நூறாக உடைவதை யாராலும் தடுக்க முடியாது என கூறினார்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் ஒருவரை ஒருவர் மாறி மாறி ஆதரித்து வாக்கு கேட்பார்கள் ஆனால் கேரளாவில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மாறி மாறி செலுத்தாது போன முறை பினராய் விஜயனை கேரளாவில் காங்கிரஸார் தோற்கடிக்க முயன்றதாக அவரை கூறினார். மேற்கு வங்கத்தில் மந்தாவை தோற்கடிக்க கம்யூனிஸ்டும் காங்கிரசும் சேர்ந்து மக்களிடம் வாக்கு கேட்டனர்.
டெல்லியில் எதிரி ஆனால் இந்திய கூட்டணியில் கூட்டணி கேரளாவில் எதிரி இந்த கூட்டணி என்பது நல்ல கூட்டணியாக இருக்காது இது சரிப்பட்டு வராது என சீமான் கருத்து தெரிவித்தார். பிஜேபியில் ஒற்றைக் கருத்துடையவர்கள் இணைகிறார்கள் அப்படி இல்லை ஒவ்வொரு மாநிலத்தில் கொள்கை முரண் இருக்கக் கூடிய கட்சிகள் சேரும்போது அதிக இடங்களில் அடித்து வரவேண்டும் கம்யூனிஸ்ட் கூட்டணியில் இருக்கிறார்கள் என்று அதிகப்படியில் வர வேண்டும் அதற்கு வாய்ப்பு இருக்கிறதா டெல்லியில் கெஜ்ரிவால் அதிகம் வெற்றி பெற்று வந்தால் தான் இந்திய கூட்டணி வலுவடையும்
சிதம்பரத்தில் திருமாவளவன் தேர்தலில் நின்றார் ஆனால் எவ்வளவு வித்தியாசத்தில் வென்றார் என பாருங்கள் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அவ்வளவு பெரிய தலைவரால் ஐயாயிரம் வாக்குகள் தான் வெல்ல முடியும் என்றால் காங்கிரஸ் திமுக கம்யூனிஸ்ட் இஸ்லாமிய அமைப்புகள் எத்தனை கட்சிகள் இருந்தும் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல முடியும் என்றால் ஒருங்கிணைப்பு இல்லை திருமாவளவனுக்கு திமுக வேலை செய்யவில்லை என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன் அந்த மாதிரி தான் இங்கும் இருக்கும். அவ்வளவு பெரிய தலைவரே கண்டு கொள்ளவில்லை என்றால் இந்த கூட்டணி எப்படி இருக்கும் என்று நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை அவர் வென்றது விடுதலை சிறுத்தைகள் வாக்கு மட்டுமே என்றார்.
நீங்கள் என்ன சிவன் கோவிலா ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலா உங்களை வந்து பார்ப்பதற்கு உங்களுக்கு நிதி கொடுப்பதற்கு அல்லது நீங்கள் ராமருக்கு கோவில் உங்களை நாங்கள் ஏன் வந்து பார்க்க வேண்டும் உங்களை ஏன் பொருட்டாக நினைக்க வேண்டும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு நிதி வழங்காது
சதுரங்க போட்டி துவங்கி வைக்க வருக முடிகிறது சாமியை தரிசிப்பதை விட ஏழையை பார்த்து அவரது தேவையை நிறைவேற்றி வைப்பதை விட வேறு ஒரு திருப்பணி இருக்க முடியுமா அதைவிட ஒரு வழிபாடு இருக்க முடியுமா எங்களை ஒரு மனிதனாக மதிக்கவில்லை வேறு என்ன பேசுவது குளிர் மழை வெள்ளத்திலே காப்பாற்ற வரவில்லை பாதுகாப்பு என்கிறார்கள் ஒருவேளை வெடித்து சிதறினால் என்ன செய்வார்கள் கிட்ட வருவார்களா ஸ்டெர்லைட் பிரச்சனை போன்ற ஒரு பிரச்சனைக்கு வருவார்களா எவ்வளவு வீடு இடிந்து இருக்கிறது பள்ளி இடிந்து இருக்கிறது அனைத்தும் தெரியும் மக்கள் வாழ்விடத்தையும் வாழ்வதற்கு இழந்திருக்கிறார்கள் என்பது அனைத்தும் தெரியும் பாதிக்கப்பட்ட இடங்களில் படங்களை பார்த்துவிட்டு செல்வதற்கு வருகிறார்கள். இதை டெல்லியில் இருந்து பார்த்திருக்கலாம் ஒக்கி புயலின் போது கன்னியாகுமரியில் பிரதமர் வந்து பார்த்து சென்றார் அதை தான் நிர்லோ சீதாராமன் பார்த்துக் கொண்டிருக்கிறார்
நம்மை வைத்திருப்பது வரிக்கும் நம்மிடமுள்ள வளத்திற்கு தான் அதனால் தான் நம்மை வைத்திருக்கிறான் கங்கை படுகையில் மீத்தேன், மீத்தேன் இருக்கா இல்லையா ஏன் தோண்டவில்லை மேற்கு தொடர்ச்சி மலை கேரளாவில் தொடங்கி ஒரிசாவில் முடிகிறது ஆனால் அங்கெல்லாம் நியூட்ரினோ திட்டத்தை தொடங்க முடியாமல் தேனியில் தொடங்குவதற்கான காரணம் அங்கே கேட்க ஆள் இருக்கிறது இங்கே இல்லை
என்றார்.
விஜய் அரசியலுக்கு வருவார். 2026ல் கண்டிப்பாக அரசியல் போட்டியிடுவார். ராமர் கோவிலை திறந்து விட்டு கட்டுகிறார் நமது ஐயா கலைஞர் அவசர அவசரமாக சட்டசபையை திறந்தது போல் பிரதமரும் செட்டு போட்டு தான் ராமர் கோவிலை திறந்து இருக்கிறார் இனிமேல் தான் கட்டுவார்கள் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக திறப்பார் என்பது எனது கருத்து அதை சரியாக செய்தார். அதை நேராக சென்று தொட்டு தரிசிக்க முடிந்ததா அவரை மனிதனாக மனிதனாக கூட நடத்தவில்லை நாட்டின் முதன்மை அமைச்சருக்கு இந்த நிலைமை பிரசாதத்தை கொடுத்துக் கொண்டே வரும்போது அவரை தாண்டி யோகி ஆதித்தியநாத்துக்கு கொடுக்கிறார்கள் என்றால் நீங்கள் நாட்டின் முதல் குடிமகனாக ஆகிவிட்டாலும் பழங்குடி மகன்தான் கோவிலுக்குள் விடமாட்டான் பாராளுமன்ற கட்டிடம் திறக்க கூப்பிட மாட்டான் நாட்டின் முதல் குடிமகன் ராம்நாத் கோவிந்துக்கு கோவிலுக்குள் செல்ல முடிந்ததா இந்தியாவின் முதல் குடிமகனுக்கு தீண்டாம இருக்கிறது என்றால் நாமெல்லாம் ஏமாத்திறோம் சகோதரத்துவம் சமத்துவம் வேற்றுமை மற்றும் என்பதெல்லாம் வேற்று வார்த்தை இது சனாதன தர்மம் என்றார்.
அவ்வளவு பெரிய ஒரு ஆள் 10 ஆண்டு ஆட்சி செய்த பிரதமர் மக்களை பார்க்காமல் கோவில் கோவிலாக கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் சாமியா ஓட்டு போட போகிறது என்ன கதை என தெரியவில்லை நான் மோடியை பார்த்து கேட்கிறேன் ராமேஸ்வரம் கோவிலுக்கு போனீர்கள் தனுஷ்கோடி சென்றீர்கள் அங்கே ராமர் பாதம் இருக்கிறது என்கிறீர்கள் ஸ்ரீரங்கத்திற்கு போனீர்கள் நேராக அயோத்திக்கு போனீர்கள் எத்தனை கோவில் போனீர்களே ஏன் முருகன் கோவிலுக்கு போகவில்லை பழனி போயிருக்கலாம். அவர்கள் இந்து கடவுள் இல்லையா அவர் பிஜேபி பிராப்பர்ட்டி இல்லையா என்றார்.
தமிழக அரசின் அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு 60 வயது ஆனவர்களுக்கு ஆறுபடை வீடுகளுக்கு பயணம் என அறிவித்துள்ளார் இந்தத் திட்டத்தில் தமிழக முதல்வரை கூட்டி செல்வாரா என்றார்.
சங்கி என சொல்வது இலிவான சொல் இல்லை தங்கை ஐஸ்வர்யா அவர்களுக்கு சொல்கிறேன் உங்கள் மீது வைக்கக்கூடிய விமர்சனம் உண்மைஇல்லை என்றால் நீங்கள் கோபப்பட தேவையில்லை எதற்கு கோபப்படுகிறீர்கள் பேச வேண்டியதில்லை வள்ளுவருக்கு என்ன தான் காவி போட்டாலும் அவரை மாற்ற முடியாது ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் இமயமலை போவதற்கு பிடிக்கிறது போகிறார் மோடி நண்பர் ஆதித்யநாத் நண்பர் அவர்கள் கூப்பிட்டால் போவார் அதை மறுக்க முடியாது இதுதான் மரபு கலைஞர்களை சுதந்திரமாக விட வேண்டும் விருப்பு வெறுப்பு பொருத்தி பார்க்க வேண்டாம்
நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள் அவர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் 10 வருடம் மன்மோகன் வந்துவிட்டார் பத்து வருஷம் மோடி ஆண்டு விட்டார் என்ன ஆறுதல் வளர்ச்சியை என்ன கண்டதுண்டு இந்திய நாட்டின் குடிமகன் என சொல்ல என்ன இருக்கிறது .
தேர்தலில் இன்று மக்களை சந்திக்காத நிர்மலா சீதாராமனுக்கு பத்தாண்டுகளுக்கு எதற்கு உயர்ந்த பதவி? தேர்தலில் மக்களையே சந்திக்காத சிவ சங்க சுப்பிரமணியனுக்கு எதற்கு பொறுப்பு மக்களை சந்தித்து மக்களின் நன்மதிப்பை பெறாதவர்களுக்கு எப்படி ஆளும் பொறுப்பை கொடுக்கிறீர்கள் என் இது என்ன மாதிரியான அமைப்பு ச்சராக வந்து தங்களை ஆண்டு விடக் கூடாது என்பதுதான் மக்களின் கோபம் ஆனால் மீண்டும் அவருக்கு அதிகாரம் கொடுத்தால் மக்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது இது ஜனநாயகத்துக்கு எதிரான துரோகம் ராஜ்யசபா உறுப்பினராக சச்சின் டெண்டுல்கர் இளையராஜாவை வைத்தீர்கள் ஒன்றும் சொல்லவில்லை எல் முருகன் தோற்று விட்டார் அவரை மாநிலங்களாக உறுப்பினர் அரசுக்கு இல்லாத உரிமை நியமன உறுப்பினருக்கு இருக்கிறது என்றால் இது என்ன ஜனநாயகம் நாடு மக்கள் ஆட்சி நாடு அப்படியானால் இந்த அமைப்பு தவறாக இருக்கிறது நேர்மையான தலைவன் நேர்மையை சந்திக்க கூடியவர்.
மின்னணு வாக்கு இயந்திரத்தை மாற்ற முடியவில்லை, பங்களாதேஷில் இயந்திரத்தை கைவிட்டு விட்டது இரண்டே இரண்டு நாடுகள் தான் இயந்திரத்தை கையில் வைத்திருக்கிறார் ஒன்று இந்தியா மற்றொன்று நைஜீரியா இரண்டுமே ஊழல் நாடுகள் நீட் தேர்வு எழுதும் போது கம்மல் மூக்குத்தி துப்பட்டா உள்ளாடைகளை கலட்ட சொல்லக்கூடியவ ர்கள் இதற்குள் எல்லாம் பிட்டு கொண்டு போக முடியும் என்றால் வாக்கு இயந்திரத்தில் குளறுபடி செய்ய முடியாதா இவர்களைப் போல் கொள்ளை கூட்ட தலைவனை உலகத்தில் பார்க்க முடியாது பாஜக 100 சதவீதம் கூட வெல்லட்டும் இந்தியாவை என்னால் காப்பாற்ற முடியாது.
ஆனால் என் நாட்டையும் என் வீட்டையும் காப்பாற்ற வேண்டுமென்றால் நான் வெல்ல வேண்டும் இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா வெல்வதை நான் தடுக்க முடியாது என் மாநிலத்தில் இல்லாமல் என்னால் ஒழிக்க முடியும் பாரதி ஜனதா என் நாட்டிற்கு தேவை இல்லை என நினைக்கிறேன் அதனால் ஒழிக்க வேண்டும் என நினைக்கிறேன் அதைத்தான் என்னால் செய்ய முடியும் என் கோட்டைக்குள் நுழைய முடியாமல் வாழ்வைத்து போர் செய்ய முடியுமென நம்புகிறேன்
இன்னொரு முறை பாரதிய ஜனதா இந்தியாவை ஆளுமென்றால் இந்தியா என்பதை மறந்து விட வேண்டியது தான் இருக்காது அவர்களுக்கு எதுவுமே தேவையில்லை ராமர் கோவில் இருந்தால் போதும் நாடு முழுவதும் வேலையில்லாமல் இருக்கிறார்களே என்று கேட்டால் ஜெய் ஸ்ரீ ராம் எது கேட்டாலும் ஜெய் ஸ்ரீ ராம் தான் பதில் ஜெய் ஸ்ரீ ராமை வைத்து தான் அவர்களை ஒழிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.