என்னை மன்னிச்சிருங்க.. பாஜகவில் இருந்து வெளியேற அவருதான் காரணம் : மீண்டும் சூர்யா சிவா போட்ட பதிவு!!
Author: Udayachandran RadhaKrishnan6 December 2022, 6:23 pm
அண்மையில் பாஜக பெண் நிர்வாகியிடம் தொலைபேசியில் ஆபாசமாக திட்டி திருச்சி சூர்யா சிவா பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுத்த தமிழக பாஜக தலைமை, திருச்சி சூர்யா சிவா பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா சிவா அறிவித்துள்ளார். மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்தை மாற்றினால் மட்டுமே பாஜக வளரும் எனவும் சூர்யா தனது விலகல் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அண்ணாமலை தமிழக பாஜகவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்றும், 2026ல் நீங்கள் தான் முதல்வர் என்றும் சில ஆலோசனைகளையும் வழங்கி தனது விலகல் கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் ஒரு ட்விட் செய்துள்ளார். அதில்,அமர்பிரசாத் ரெட்டி உங்கள டேக் பண்ண மறந்துட்ட, மன்னித்துவிடுங்கள், நான் பாஜகவில் இருந்து விலக முக்கிய காரணமே நீங்கள்தான் என ட்வீட் செய்துள்ளார்.
சூர்யா சிவா – டெய்சி இடையேயான ஆடியோவை அமர்பிரசாத் ரெட்டி தான் வெளியிட்டாரா? அதனால்தான் பாஜகவில் இருந்து வெளியேற அவரை காரணம் காட்டியுள்ளாரோ என பல்வேறு கேள்விகளை இந்த ட்வீட் ஏற்படுத்தியுள்ளது.