தொழிலாளர்கள் போராட்டம்.. வாய் திறக்காமல் வேடிக்கை பார்க்கும் கம்யூனிஸ்ட் கட்சி… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

Author: Babu Lakshmanan
3 June 2022, 2:00 pm

தொழிலாளர் பிரச்சனைக்கு கூட வாய் திறக்காமல் வேடிக்கை பார்ப்பதாக இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகம் அருகே அதிமுக தொழிற்சங்கம் சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுக தொழிற்சங்க தொண்டர்கள் மத்தியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது :- தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு தொழிலாளர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை கூட நடத்தாமல் இருக்கிறது இந்த திமுக அரசு. தொழிலாளர்கள்தான் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அவர்களின் பிரச்சனைக்கு கூட கம்யூனிஸ்ட் கட்சியினர் வாய் திறக்கவில்லை.

தினசரி வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு நடந்து வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதிமுக ஆட்சியின் போது மின்தடை இல்லை. ஆனால், எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மின்தடை ஏற்படுகிறது.

மேலும், கஜா புயல், வர்தா புயலில் சுனாமி ஆகிய காலங்களிலும் கேங் மேன் ஆட்களின் உழைப்பு இருந்தது. அவர்களின் பாவம் திமுக அரசை சும்மா விடாது. சட்ட சபையில் மத்திய அரசு குறைகளைக் கூற முடிந்தது. ஆனால் மாநில அரசு மின்சார வாரிய ஆட்கள் குறைபாடு பற்றி கூற முடியவில்லை. மவுனம் சாதித்தது ஏன்..?, என தெரிவித்தார்

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 654

    0

    0