கோவை : அதிமுக இரட்டை தலைமையோடு சேர்ந்தே இருப்பதுதான் இயக்கத்திற்கு நல்லது என்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி தெரிவித்துள்ளார்.
கோவை விளாங்குறிச்சியில் உள்ள தனது இல்லத்தில் கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அதிமுகவைச் சேர்ந்த ஆறுகுட்டி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது :- உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்து இருக்கிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதே பல முறை உள்ளாட்சி தேர்தல் நடத்த கேட்டும் நடத்தாமல் இருந்து விட்டனர். தற்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தனித்தனியாக பேட்டி கொடுக்கின்றனர். உள்ளாட்சி தேர்தல் நடத்தி இருந்தால் ஆட்சி போயிருக்காது. இரு கோஷ்டியாக பிரிந்து அதிமுக சண்டை போட்டுகொண்டு இருக்கின்றனர். ஒரு விபத்தின் காரணமாக ஓபிஎஸ்.இபிஎஸ் இருவரும் பதவிக்கு வந்து விட்டனர்.
இருவரும் சண்டை போடுவது சரியில்லை.ஒன்றரை கோடி தொண்டர்களை கேட்டும் எதுவும் செய்யவில்லை. ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் தாங்கள் இருக்கும் வார்டுகளை கூட கைப்பற்ற முடியவில்லை. அதிமுக சாதிகட்சியாக சென்று கொண்டிருக்கிறது. அதிமுக துரோக கட்சியாக மாறி விட்டது. மேல் இருந்து கீழே வரை மாறிவிட்டது. இயக்கத்தை காணாமல் ஆக்கி விட்டனர்.
அதிமுகவில் கோஷ்டி இருந்ததில்லை. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் சுத்தமானவர்கள் இல்லை. கீழ் இருந்து கட்சியில் மேல் வரை வந்தவன் நான். எனக்கு சீட் இல்லை. என்னுடன் யாரும் பேசவில்லை. நான் ஒதுங்கி விட்டேன். சசிகலா வர வேண்டும் என சொல்ல வில்லை. யாரையாவது அனைவரும் சேர்ந்து தேர்ந்தெடுங்கள். ஒற்றை தலைமை வரட்டும். இவர்கள் இருவரும் வேண்டாம். சசிகலா, தினகரன் என அனைவரையும் சேர்த்து கட்சி இயங்க வேண்டும்.
அதிமுகவினர் தற்போது வேதனையில் இருக்கின்றனர். இருவரும் ஒதுங்கிக்கொள்ளுங்கள். வேறு யாராவது தலைமை பொறுப்பிற்கு வரட்டும். நன்றி மறந்தவர்களாக இருவரும் இருக்கின்றனர். ஜெயலலிதா இருந்த போது இருந்த மாதிரியாக கட்சி இல்லை. ஏன் உள்ளாட்சி அமைப்புகளில் அதிமுக வெற்றி பெற வில்லை. இயக்கம் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கின்றோம்.
அன்வர்ராஜாவை ஏன் நீக்கினீர்கள்? கட்சிக்காக பேசியதால் நீக்கினார்கள். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து கட்சியில் இருப்பவர் அவர். பேட்டி கொடுப்பதால் என்னை நீக்கினால் நீக்குங்கள். சசிகலாவை ஏன் மோசமாக பேச வேண்டும். எடப்பாடி பழனிசாமியை கையை பிடித்து முதல்வர் என அடையாளம் காட்டியவர் அவர். ஜெயலலிதா மறைந்த பிறகு 4 வருடம் அமைச்சர் ஆபீசுக்கு சென்றால் உரிய மரியாதை இருக்காது. வேறு யாராவது தலைமை பொறுப்பிற்கு வரட்டும்.
ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவருக்குமே கட்சியில் ஆதரவு இல்லை. அதிமுக சோதனைகளை கடந்து வந்த கட்சி. இனி இருவரும் ஒன்று சேர்ந்து இயங்க வாய்ப்பில்லை. அதிமுக சாதிக்கட்சியாக சுருங்கி விட்டது. தயவு செய்து அதிமுகவை சாதிக்கட்சியாக்கி விடாதீர்கள். சட்டமன்ற தேர்தலில் தனக்கு சீட் கொடுக்காதது கூட வருத்தமில்லை. என்னை அழைத்து கூட வேலுமணி பேசவில்லை. அம்மாவே என்னை அழைத்து சீட் வழங்கினார்.
பிரதமர் கூறியதால் துணை முதல்வர் பதவி ஏற்றேன் என ஒ.பி.எஸ் வெளிப்படையாக பேசி இருக்க கூடாது. பா.ஜ.க கட்சியை வளர்த்து கொண்டு விட்டனர். அதிமுக சாதி கட்சியாக இரு பிரிவாக மாறி விட்டது.இருவரும் இணைந்து செயல்பட வேண்டும். சசிகலா, தினகரனுடன் எனக்கு எவ்வித தொடர்புமில்லை. இது போன்ற நிலை கட்சிக்கு வரும் என எதிர்பார்த்தேன், வந்துவிட்டது.
அரசியல் வேண்டாம் என முடிவு செய்து விட்டேன். வேறு கட்சியில் இருந்தும் அழைத்தார்கள். நான் போகவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி கூட என்ன அழைத்தார். ஆனால் நான் செல்லவில்லை. அதிமுக விற்கு எதிராக செயல்படவில்லை. ஒ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் மக்கள் தலைவர்கள் கிடையாது. மாவட்ட தலைவர்கள். தற்போது அதிமுகவில் இருக்கின்றேன். ஒ.பி்.எஸ், இ.பி.எஸ் தலைமையின் கீழ் இல்லை, என தெரிவித்தார்.
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
This website uses cookies.