அதிமுக முன்னாள் பிரமுகருக்கு திடீர் உடல்நலக்குறைவு : அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2023, 10:16 am

சிறந்த பேச்சாளர்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத் மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர். வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி 2012ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

அவருக்கு அங்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார்.

தினகரன் அமமுகவை ஆரம்பித்த நிலையில் அதில் அண்ணாவும் திராவிடமும் இல்லை எனக் கூறி கட்சியில் சேரவில்லை. பின்னர் அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்துவிட்ட நாஞ்சில் சம்பத், சமீப காலமாக திமுக நடத்தும் கூட்டங்களில் கலந்துகொண்டு திராவிட இயக்கம் சார்ந்து பேசி வருகிறார்.

திரைப்படங்களில் நடிப்பதோடு இலக்கிய நிகழ்வுகளிலும் பங்கெடுத்து வருகிறார். இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவு காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

  • goundamani is the only actor who called rajinikanth without respect ரஜினியை வாடா என்று அழைத்த ஒரே காமெடி நடிகர்? அந்த அளவுக்கு கெத்தா இவரு?
  • Close menu