அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் ஜூலை 11 ம் தேதி நடக்கிறது. இதற்கு,போலீஸ் பாதுகாப்பு அளிக்ககோரி முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பென்ஜமின் ஆகியோர், டி.ஜி.பி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் பேசியதாவது :- பொதுக்குழு கூட்டத்திற்கு காவல்துறை முழுமையாக பாதுகாப்பு வழங்கவேண்டும். சமூக விரோதிகள் பொதுக்குழு நடைபெறும் இடத்தில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பொதுக்குழுவை தடுக்க ஓ.பி.எஸ்.தரப்பினர் சமூக விரோதிகளை துண்டி விடுவதற்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த ஜூன் 23ம் தேதி போல் அல்லாமல், ஜூலை 11ம் தேதி காவல்துறை முறையாக பாதுகாப்பு வழங்க வேண்டும். அதுதொடர்பாக, தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபுவை நேரடியாக சந்தித்து மனு அளித்தோம். டி.ஜி.பி பாதுகாப்பு வழங்குவதாக உறுதி அளித்துள்ளார், எனக் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது, ஓ.பி.எஸ் கட்சி விதிகளை மீறி நடப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா..? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, அவர் பதிலளித்ததாவது :- கட்சி விதிகளை மீறி செயல்படுவது யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தொண்டனுக்கு ஒரு விதி நிர்வாகிகளுக்கு ஒரு விதி என தனித்தனியாக எதுவும் இல்லை. கட்சி விதிகளை மீறினால் அதிமுக தலைமை முடிவு செய்யும்.
கொரோனா விதிமுறைகளின் படி, பொதுக்குழு நடைபெறும். அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. திருமதி இளவரசி, சசிகலாவின் 150 கோடி ரூபாய் சொத்துக்களை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கி இருக்கிறது. அதற்கு நழுவின மீன் போல் நழுவினார், என தெரிவித்தார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.