முதலமைச்சர் ஸ்டாலினின் துபாய் பயணத்தில் திமுகவின் குடும்ப ஆடிட்டர் சென்றது ஏன்..? மத்திய அரசு விசாரிக்க ஜெயக்குமார் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
30 March 2022, 4:49 pm

பொய் வழக்கு போடுவதில் திமுக ஆட்சி ஆஸ்கர் விருது பெறுவதற்கு தகுதியான ஆட்சி என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் இரண்டாவது நாளாக ராயபுரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது :- ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து எதிர்கட்சிகளை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தில், குறிப்பாக அதிமுகவை முடக்க வேண்டும் என பொய் வழக்குகள் போட்டு வருகின்றனர்.

ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறும் வகையில் பொய் வழங்கு போடும் முதல்வர், சர்வாதிகாரிகள் எல்லாம் வராலாற்றில் எப்படி வீழ்ந்தார்கள் என்பதை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு புத்தகம் கூட தயார்.

பொய் வழக்கு போட்ட பின் சட்ட போராட்டம் நடத்தி நீதிமன்றம் வழங்கி உத்தரவின் அடிப்படையில் கையெழுத்திட்டு வருகின்றேன். பேசினால் சிறை என்பது சர்வாதிகார நாட்டில் தான் நடக்கும். ஆகையால் இது குறித்து குடியரசு தலைவர், மனித உரிமை ஆணையம் என அனைத்து இடங்களிலும் புகார் மனு அளித்துள்ளோம். அதற்கான பதிலை திமுக அரசு சொல்ல வேண்டும்.

அமைச்சர் ராஜகண்ணப்பனை நீக்கமால் வேறு இலக்கா மாற்றம் செய்திருப்பது அவருக்கு கிடைத்த பரிசு தான். தண்டனை அல்ல. பெயருக்கு வெளியே திராவிட மாடல் என சொல்வது. வெளிநாடு முதலீடுகள் எல்லாம் எதற்கு என்பது நினைத்தால், மாலு மாலு சுரங்கனிக்காக மாலு என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது. வெளிநாடு பயணத்தில் திமுகவின் குடும்ப ஆடிட்டர் ஏன் சென்றார் என்பதற்கு மத்திய அரசு விளக்கம் கேட்க வேண்டும், என தெரிவித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1427

    1

    0