திருச்சி : அதிமுகவை யாரும் மிரட்ட முடியாது என்றும், மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம் என்று திருச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் திமுகவை சேர்ந்த ஒரு நபர் கள்ள ஓட்டு போடுவதாக கூறி அந்த நபரை அடித்து சட்டையை கழட்டி இழுத்துச் சென்றனர். இது தொடர்பான புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டு
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறை அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும், தொடர்ந்து அவர் மீது நில அபகரிப்பு வழக்கு உட்பட மூன்று வழக்குகள் அவர்மேல் போடப்பட்டதால், அவர் ஜாமீனில் வெளியே வர முடியவில்லை.
தொடர்ந்து மூன்று வழக்குகளிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், திருச்சியில் 2 வாரங்கள் தங்கியிருந்து கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி என மூன்று நாள் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டது.
அதன்படி, புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த அவர் கடந்த திங்களன்று திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் காலை பத்து முப்பது மணி அளவில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தகத்தில் கையெழுத்து விட்டு புறப்பட்டார். தொடர்ந்து இன்று காலை 2ம் முறையாக கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார். நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை மூன்றாவது முறையாக கையெழுத்திட உள்ளார்.
இதனிடையே, செய்தியாளருக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது :- திமுக தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் மீதும், கழக முன்னோடிகள் மீதும் வழக்குகள் தொடர்ந்து மிரட்டி பார்க்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாமல், தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குகளை போட்டு, பணம், நகை ஏதும் சல்லி காசு கூட கைப்பற்றாமல், அதை கைப்பற்றியதாக குறிப்பிடுவது பொய், எனக் குற்றம்சாட்டினார்.
ஜாமினில் வெளிவந்த ஜெயக்குமார் தொடர்ந்து பேட்டிகளை கொடுத்து வருவதாக திமுக ஆர். எஸ். பாரதி கூறியது குறித்து பேசியது பற்றி அவர் பதிலளித்ததாவது :- நீதிமன்ற உத்தரவுபடி திருச்சியில் தங்கி இருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திடுகிறேன். எனக்கு பேட்டி கொடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. ஜெயக்குமாரின் வாயை மூட முடியாது. ஒன்றரை கோடி தொண்டர்களின் வாயை மூடமுடியாது, என்றார்.
மேலும், இந்தியாவின் சிறந்த முதல்வர் ஸ்டாலின் என குறிப்பிடுகிறார்களே என்பதற்கு இந்த நூற்றாண்டின் சிறந்த ஜோக் என குறிப்பிட்டார். திமுகவை கெளரவர்கள் ஆட்சி என்றும், அதிமுக பாண்டவர்கள் ஆட்சி என்றும் குறிப்பிட்ட அவர், பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று விரைவில் வரும், என நம்பிக்கை தெரிவித்தார்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.