யாராவது எதையாவது சொல்லிட்டு திரிவாங்க.. சீரியசாக எடுக்கக் கூடாது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நக்கல்..!!

Author: Babu Lakshmanan
1 August 2022, 4:22 pm

சென்னை : தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பங்கேற்றது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது. இதற்கான பணிகளை 2023 மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு தமிழக தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கோவை செல்வராஜூம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதில் உடன்படுகிறோம். வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்கி முழுமையான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுட ன் இணைப்பதை போன்று மற்ற 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைக்க வேண்டும்.

அதிமுக சார்பில் தானும், பொள்ளாச்சி ஜெயராமனும் கலந்து கொண்டோம். கோவை செல்வராஜ் எந்த கட்சி சார்ந்தவர் என்பது தெரியாது. யாராவது எதையாவது சொல்வார்கள். அதை எல்லாம் சீரியசாக எடுத்துக்கொள்ள கூடாது.

தற்போது தொழில் துறையை பொறுத்தவரை செமி கண்டக்டர் உற்பத்தி தொழில் மிகவும் வளர்ச்சி அடைந்து வருகிறது. தமிழகத்தில் இத்தகைய செமி கண்டக்டர் உற்பத்தியில் ஈடுபட உள்ள வேதாந்தா மற்றும் பாக்ஸ் கான் நிறுவனங்கள் தமிழகத்திலிருந்து வெளியேறி மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்றுவிட்டன, எனக் கூறினார்.

திமுக சார்பில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த நிலையில், இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு கொட்டாம்பாக்கு கேட்டால் பட்டுக்கோட்டைக்கு வழி சொல்கிறார் என்பது போல அர்த்தம் புரியாமல் பேசி வருவதாக குற்றம்சாட்டினார்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 737

    0

    0