கொள்ளையடிப்பதை கருணாநிதிக்கே கற்றுக் கொடுக்கும் திறமை வாய்ந்தவர் அமைச்சர் செந்தில் பாலாஜி : எம்ஆர் விஜயபாஸ்கர் விமர்சனம்

Author: Babu Lakshmanan
25 July 2022, 6:47 pm

கொள்ளையடிப்பது எப்படி என்பது குறித்து மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கே கற்றுக் கொடுக்கும் திறமைமிக்கவர் அமைச்சர் செந்தில் பாலாஜி என்றுமுன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடியாக பேசியுள்ளார்.

தமிழக அரசின் சொத்துவரி உயர்வு மற்றும் மின்கட்டண உயர்வினை கண்டித்து கரூர் மாவட்ட அதிமுக சார்பில், மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது :- மக்களுடைய வாழ்வாதாரத்தினை பாதிக்க கூடிய அளவில் இந்த மின்கட்டண உயர்வு. மீட்டர் வாடகை மாதம் ரூ. 60. அடுத்தது, டிஜிட்டல் ஸ்மார்ட் மீட்டர் வருகின்றது. அதிலும் கொள்ளை, கொள்ளையடிப்பதிலேயே, கருணாநிதிக்கே கற்றுக் கொடுக்க கூடியவர் நம்மூர் திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி.

கடந்த 10 ஆண்டுகாலம் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்த நிலையில், தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், மின் வெட்டு ஆட்சியில் கொள்ளையடிப்பதற்காக உருவாக்கப்பட்டது. சொந்தத்திற்காகவும், ஊழல் செய்வதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்திலிருந்து தற்போது தான் மீண்டு எழுந்து வரும் நிலையில், அதே மக்களுக்கு மீண்டும் அழுத்தம் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.

ஆகவே, எந்த காரணமாக இருந்தாலும் மத்திய அரசின் மீது பழிபோடுகின்றது தான் திமுக அரசின் வேலை. மத்திய அரசினை எதிர்த்து கேட்க வேண்டியது தானே. தற்போது பேருந்து கட்டணமும் மக்களுக்கு பம்பர் பரிசாக திமுக அரசு கொடுக்க காத்திருக்கின்றது. மேலும், போக்குவரத்து துறையில் 4 ஆண்டு காலத்தில் தமிழக வரலாற்றில், 38 ஆயிரம் போக்குவரத்து டிரைவர், கண்டக்டர் ஆகியவைகளை நியமித்து வரலாற்று சாதனை பிடித்தவரும் நம்ப டாஸ்மாக் மந்திரி தான்.

அதில் ஆயிரம் கோடி கொள்ளையடித்து தற்போது வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. பணம் யார் கொடுத்தாலும் சரி, வாங்கி கொண்டு போஸ்ட்டிங் போட்டு விட்ட பெருமையும் செந்தில்பாலாஜியையே சாரும். ஆகவே, பேருந்திற்கு ஏற்றவாறு டிரைவர், கண்டக்டர் போடுவது ஒருபுறம். ஆனால் செந்தில்பாலாஜி, டிரைவர் கண்டக்டரை போட்டுவிட்டு, அதற்கு தகுந்தாற்போல், பேருந்துகளை போட்ட ஒரே மந்திரி செந்தில்பாலாஜி தான், என்றும் கூறினார்.

  • ajith fans criticize ilaiyaraaja in strong words for giving notice to good bad ugly “இளையராஜா ஒரு பண பைத்தியம்”… தானாக ஆஜர் ஆகி அடிவாங்கும் அஜித் ரசிகர்கள்! ஏன் இப்படி?