திமுகவை நம்பி அரசியல் செய்கிறார் ஓபிஎஸ்… ஒருபோதும் ஆசை நிறைவேறாது… முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி அதிரடி..!!

Author: Babu Lakshmanan
27 June 2022, 6:08 pm

திருச்சி : திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் சசிகலாவை நம்பி ஓ.பன்னீர்செல்வம் அரசியல் செய்வதாக முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான பரஞ்ஜோதி செய்தியர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :- அதிமுக ஆட்சியை கொண்டு வர
ஒற்றை தலைமை மீண்டும் தேவை. மாவட்ட செயலாளர்களில் 2 பேரைத் தவிர 75 மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஒற்றை தலைமை வரவேண்டும் என கோரிக்கையை பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் எழுப்பினர்.

நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு உள்ளதை தெளிவாக வெளியாக உள்ளது. ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்தை நிறுத்த தமிழக காவல்துறை தலைவர், பிஜேபி திருமண மண்டப உரிமையாளருக்கும் கடிதம் எழுதுவதன் மூலம் அதிமுகவை அழிக்க துடிக்கிறார்.

அவர் ஸ்டாலின், TTV, சசிகலாவை நம்பி அரசியல் செய்கிறார். ஓபிஎஸ் இன் ஆசை ஒருபோதும் நிறைவேறாது, என தெரிவித்தார்.

  • Dragon Beat Vidaamuyarchi Movie Collection விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!