மதுரை : அம்மா மினி கிளினிக் என்பதை மாற்றி மக்களை தேடி மருத்துவம் என்று கூறி மக்களை ஏமாற்றுகிறது தி.மு.க. என தமிழக எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மறைந்த சுவாமி சதாசிவானந்தாவின் யதி பூஜை விழா நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்பி உதயகுமார் பேசியதாவது :- நெசவாளர்கள் வாழ்வில் வளர்ச்சிக்கு பேரறிஞர் அண்ணா கைத்தறி ஆடைகளை சுமந்து விற்பனை செய்தார். நெசவாளர்களுக்கு வாழ்வில் ஒளி ஏற்றும் வகையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 1983ஆம் ஆண்டு வேட்டி, சேலை திட்டத்தை தொடங்கினார்.
தொடர்ந்து ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2021ம் ஆண்டில் கூட பொங்கல் பரிசு உடன் சேர்ந்து 490 கோடியில் விலையில்லா வேட்டி சேலை வழங்கப்பட்டது. இது வருவாய் துறை மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டது. ஏனென்றால் நானும் வருவாய் துறை அமைச்சராக பணியாற்றினேன். இதன் மூலம் 14,000 கைத்தறி நெசவாளர்கள், 54,000 விசைத்தறி நெசவாளர்கள் பயன்பட்டனர்.
அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், அம்மா மினி கிளினிக், அம்மா இருசக்கர வாகன திட்டம் என்று அம்மா ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் எல்லாம் மூடுவிழா நடத்தப்பட்டு விட்டன . தற்பொழுது அம்மா மினி கிளினிக் என்பதை மாற்றி, மக்களை தேடி மருத்துவம் என்று கூறினார்கள்.
ஆனால், ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்களை பெயர் பதிவு செய்து மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. புதிதாக எதுவும் செய்யவில்லை. மக்களை ஏமாற்றி வருகின்றனர். மேலும், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளது. தற்போது மின் பற்றாக்குறை மட்டுமல்லாதது, மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை கண்டித்து எடப்பாடியார் ஆணைக்கிணங்க கழக ரீதியில் உள்ள 75 மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, என்றார்.
கவுண்ட்டர் மணி… கோலிவுட் வரலாற்றில் கவுண்ட்டர் வசனங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் கவுண்டமணி. சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு ஆயிரத்திற்கும்…
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி கூலித்தொழிலாளி. இவரது மனைவி…
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் உறவினரும் போக்சோ வில் கைது செய்யப்பட்டு…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்…
சமீபத்தில் திமுகவில் சேர்ந்து புதிய பதவிக்கு தேர்வான சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், ஒரு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யை…
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை…
This website uses cookies.