சென்னை : புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை முன்னாள் அமைச்சர்கள் திடீரென்று சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளாட்சி நகர்ப்புற தேர்தலின் போது, கள்ள ஓட்டுப் போட வந்ததாகக் கூறப்படும் திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் கைது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து பல்வேறு வழக்குகள் அவர் மீது போடப்பட்டது. இது அரசியல் பழிவாங்கும் செயல் என அதிமுக விமர்சித்தது.
இதனிடையே, அவர் மீது சுமத்தப்பட்ட வழக்குகளில் ஜெயக்குமாரை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் சிறையில் இருந்து வெளியே வர உள்ளார்.
இந்த நிலையில், சிறையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இதில் முன்னாள் அமைச்சர்கள், தங்கமணி, மூர்த்தி, பெஞ்சமின் மற்றும் அதிமுக தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.