‘ஓசி பஸ்ஸா இருந்தா போயிட்டு போயிட்டு வருவியா..?’ பெண்களுக்கு நீளும் அவமானம் ; வீடியோவை பகிர்ந்து அண்ணாமலை கடும் கண்டனம்

Author: Babu Lakshmanan
17 December 2022, 1:37 pm

பேருந்து நடத்துநர் ஒருவர் இலவசப் பேருந்து பயணம் மேற்கொண்ட பெண்ணை அவமானப்படுத்தும் விதமாக பேசியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக தேர்தல் வாக்குறுதியில் ஒன்றாக மகளிருக்கு இலவச பேருந்து சேவையை தமிழக அரசு தொடங்கியது. இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டியதாக உள்ளது. குறிப்பாக, அமைச்சர் பொன்முடி ஒரு நிகழ்ச்சியில், பேருந்தில் ஓசியில தான போறீங்க என குறிப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களை ஓசி பயணம் எனக் கூறி நடத்துநர்கள், ஓட்டுநர்கள் அவமதிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.

இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தஞ்சையில் இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளும் மூதாட்டியை, ஓசி பஸ்ஸா இருந்தா போயிட்டு போயிட்டு வருவியா…? என்று நடத்துநர் ஒருவர் அவமதிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அமைச்சர் ஒருவரே ஓசி பயணம் எனக் குறிப்பிட்டு பேசும் போது, அரசுப் பேருந்து ஊழியர்களிடம் இருந்து வேறு எந்த மாதிரியான வார்த்தைகளை எதிர்பார்க்க முடியும்..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 440

    0

    0