மகாகவி பாரதியாருக்கு புதிய கவுரவம்… இனி ஒவ்வொரு ஆண்டும்… மத்திய அரசின் மாஸ் அறிவிப்பு.. நெகிழ்ந்து போன அண்ணாமலை!
Author: Babu Lakshmanan9 December 2022, 11:44 am
மகாகவி பாரதியாரை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு எடுத்துள்ள புதிய நடவடிக்கையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிர்ந்துள்ளார்.
உள்ளூர் முதல் உலக நாடுகள் வரையில் பல மேடைகளில் உரையாற்றிய பிரதமர் மோடி, பெரும்பாலும் தமிழ் மொழி குறித்தும், தமிழ் மொழியை பயன்படுத்தியும் பேசாமல் இருந்ததில்லை. மேலும், தமிழ் மொழி வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.
இந்த நிலையில், மகாகவி பாரதியாரை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. அதாவது, இனி ஒவ்வொரு ஆண்டும், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த தினத்தன்று, “பாரதத்தின் மொழிகளுக்கான உற்சவம்” கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிர்ந்துள்ளார். அதில், “கடந்த 8 ஆண்டுகளில், பல்வேறு தருணங்களில், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, கலாச்சாரம், வரலாறு மற்றும் நமது சுதந்திரப் போராட்ட தியாகிகளை பலமுறை உலக மேடைகளிலும் கௌரவித்துள்ளார் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி,
நமது நாட்டின் பிராந்திய மொழிகளை ஊக்குவிக்கவும், மொழிகளுக்கு இடையேயான நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் இனி ஒவ்வொரு ஆண்டும், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த தினத்தன்று, “பாரதத்தின் மொழிகளுக்கான உற்சவம்” நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் கொண்டாடப்படும்,” என தெரிவித்துள்ளார்.