இசைக்குயிலின் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள்..!!

Author: Rajesh
6 February 2022, 5:46 pm

மும்பை: மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம் மும்பை பிரபுகஞ்சில் இருந்து தொடங்கியது. பிரபலங்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர்.

மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் உடல், ராணுவ வாகனத்தில் வைத்து இறுதி சடங்கிற்காக சிவாஜி பார்க் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம், மும்பை பிரபுகஞ்சில் இருந்து தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், இறுதி அஞ்சலி பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி மும்பை வருகை தந்துள்ளார்.

லதா மங்கேஷ்கருக்கு கவுரவும் அளிக்கும் வகையில், மேற்கு வங்கத்தில் உள்ள சிக்னல்கள், அரசு மற்றும் பொது இடங்களில் அடுத்த 15 நாட்களுக்கு லதா மங்கேஷ்கரின் பாடல்களை இசைக்க மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

  • Actress Sneha has a rare disease.. Prasanna praises her courage! நடிகை சினேகாவுக்கு அரிய வகை நோய்.. தைரியத்தை பாராட்டும் பிரசன்னா!