காலை உணவுத் திட்டத்தை நாங்க தான் கண்டுபிடிச்சோம் என திமுக சொல்வது வேடிக்கை ; அண்ணாமலை விமர்சனம்!

சேலத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை கொண்டுவந்தபோது மத்தியஅரசு காலை உணவு திட்டத்தை புதிய கல்விக் கொள்கையின் ஊக்குவித்து உள்ளனர். இந்தியா முழுவதும் கொண்டு வரவேண்டும் என்பது பிரதமர் மோடியின் எண்ணம்… அதற்கான நிதியும் மத்திய அரசு கொடுக்க ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக புதிய கல்விக் கொள்கையில் கொண்டுவரப்பட்டுள்ள திட்டத்தை மாநிலஅரசு முழுமையாக நிறைவேற்ற ஆரம்பித்தால், அதற்கான நிதி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் தமிழகஅரசு விகண்டாவாதமாக புதிய கல்விக் கொள்கையை ஏற்று கொள்ளமாட்டோம்..காலை உணவு திட்டத்தை திமுக கண்டுபிடித்து உள்ளோம் என்று செயல்படுவது வேடிக்கையாக உள்ளது.

காலை உணவு திட்டம் கண்டிப்பாக கொடுக்கவேண்டும்; இதில் அரசியல் செய்யக்கூடாது.. இதில் மாற்றுக் கருத்தும் இல்லை, யார் கொண்டு வந்தாலும் மக்களுக்கு பயன்பட வேண்டும்.

மேலும் படிக்க: திமுக அரசின் மிகப்பெரிய சாதனை… முதலமைச்சருக்கு என்னுடை நன்றி ; கனிமொழி எம்பி நெகிழ்ச்சி!

ஆனால் தமிழகத்தில் திராவிடமாடல் என்று கூறுவது ஏற்றுக்கொள்ளமுடியாது காலை உணவு திட்டம் மட்டுமில்லாமல் மதிய உணவு திட்டம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் குழந்தைகளுக்கும் சத்தான உணவு கொடுக்கவேண்டும் என மத்தியஅரசு நிறைந்துள்ளனர்.

குறிப்பிட்ட வயதில் உள்ள மாணவ, மாணவிகள் சத்தான உணவு எந்தளவிற்கு சாப்பிடவேண்டும் என்று நிர்ணித்துள்ளது.அதை தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து 100 சதவீதம் தமிழகத்தில் கொண்டுவர முனைப்பு காட்டவேண்டும், அரசியல் காட்டக்கூடாது.. நிதி பற்றாக்குறை இருந்தாலும் மத்திய அரசு கொடுக்க தயாராக உள்ளது எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கைக்காக குழு அமைத்து அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை குறித்து விளக்கமாக பேசப்பட்டுள்ளது.. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை பெயரை மாற்றி அப்படியே வைத்துள்ளனர். தமிழக அரசு இன்னும் சிறப்பாக செய்யட்டும்..

குறிப்பாக ஊட்டச்சத்தை உறுதிப்படுத்த வேண்டும் அதற்கு என்ன வேண்டுமானாலும் மத்திய அரசு செய்யும் இது குறித்து புதிய கல்வி கொள்கையில் பேசி உள்ளதாக கூறினார்.

நீட்தேர்வு பொருத்தவரை நீட்தேர்வு வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளோம்; தமிழகம் இந்தாண்டு தான் சிறப்பான செயல்பட்டு உள்ளது. 59 சதவீதம் விழுக்காடு தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.நீட்தேர்வு நடத்தும் அமைப்பில் குளறுபடி உள்ளதா? என்று உச்சநீதிமன்றம் ஆய்வு செய்து வருகிறது.தவறுகளை சரி செய்து வருகின்றனர்.

நீட்தேர்வில் வினாத்தாள் வெளியானது; ஒரு சில இடங்களில் நடந்துள்ளது. அதில் யார் யார் தவறு செய்துள்ளார்களோ? அதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

திமுக நீட்தேர்வை வைத்து தொடர்ந்து அரசியல் செய்து வருகிறது.நீட்தேர்வு வருவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பும்,பின்பும் வெள்ளை அறிக்கை தரவேண்டும்; அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்கு நீட்தேர்வுக்கு முன்பாக எத்தனை பேர் சென்றுள்ளார்கள், நீட்தேர்வுக்கு பிறகு எத்தனை பேர் சேர்ந்து உள்ளார்கள் என்பது குறித்து தனித்தனியாக பிரித்து தரவேண்டும்..

இதைக் கொடுத்தாலே தமிழக மக்களுக்கு தெரிந்துவிடும்; நீட்தேர்வு ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவியாக உள்ளது. டேட்டாவை கொடுக்காமல் வாய்பேச்சை மட்டுமே தமிழக அரசு பேசி வருகிறது என்றும் விமர்சனம் செய்தார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை வெளியிட்டுள்ள சிசிடிவி உண்மைதான்… காட்சிகளில் வந்த நபர்களின் புகைப்படத்தை வைத்து குற்றவாளிகளை இவர்கள்தான் குற்றவாளி என்று சொல்லி உள்ளார்கள் என்பது உண்மைதான்…. ஆனால் கூலிப்படை ஏவிவிட்டது யார்? இதற்கு உதவியாக இருந்தது யார்? இதற்கு மூளையாக இருந்தவர் யார் என்பது குறித்து இதை கண்டுபிடிக்க வேண்டும்.

திருவேங்கடத்தை என்கவுண்டரில் கொன்ற நிலையில் திருவேங்கடத்தை ஏவிவிட்டவர் யார்? திருவேங்கடம் சொல்ல வந்த உண்மை என்ன? என்பது குறித்து தெரிய வேண்டும்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல் மரணமா? அல்லது வேறு ஏதாவது மரணமா? என்பது குறித்து சிபிஐ விசாரணை வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். மேலும் சரணடைந்த ஒருவர் ஏன் தப்பியோட வேண்டும், கையில் துப்பாக்கி வந்தது எப்படி உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் உள்ளது.

திருவேங்கடம் ஒரு குற்றவாளி என்பதை ஏற்றுக் கொள்கிறோம்; திருவேங்கடத்திற்கு பின்னால் உள்ளது யார் என்பதை தான் எங்களுடைய கேள்வி என்றும் கூறினார்.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்துவது இல்லை; பிஎம் கிஷான் திட்டத்தில் எவ்வளவு விவசாய நிலம் வைத்திருந்தால் 6 ஆயிரம் ரூபாய் உதவி பணம் கிடைக்கும் என்பது குறித்து மத்திய அரசு அளவு நிர்ணித்தது.

தமிழகத்தின் 43 லட்சம் விவசாயிகள் 2021 விவசாயிகள் பயனடைந்தனர். இன்றைய தினம் 21 லட்சம் விவசாயிகள் மட்டுமே பயனடைகிறார்கள்.

மத்திய அரசின் திட்டத்திற்கு 100 சதவீதம் கெட்ட பெயர் வரவேண்டும் என்பதற்காக நிறைய விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டம் செல்லக்கூடாது என்பதற்காக தடுக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.

தமிழக அரசியலில் வந்துவிட்டால் ஆடு வெட்டுவது எல்லாம் சாதாரணம்.. எனக்கு புதிதல்ல; நான் புகார் கொடுக்கப் போகவில்லை..நாம் மோதிகொண்டிருப்பது திராவிட அரசியல்; சாதாரண அரசியல் அல்ல… பழிசொல், பொய்யான குற்றச்சாட்டு, பொய்யான புகார் உள்ளிட்டவைகள் சாதாரணம்தான்..

திமுகவின் முகம் எப்படி உள்ளது என்பது குறித்து தமிழக மக்கள் பார்க்கிறார்கள் என்பது தான் நான் சொல்கின்ற செய்தி;நாம் இதற்காகவெல்லாம் அஞ்சப் போவதில்லை என்றும் பேசினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

3 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

3 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

4 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

4 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

5 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

5 hours ago