தமிழகத்தை உலுக்கிய கூட்டுப் பாலியல் பலாத்காரம் : தப்பியோடிய கொடூரன்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு.. பரபரப்பு.. பதற்றம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
15 January 2023, 11:37 am

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில் தங்கி வேலை செய்யும் இளம் பெண் ஒருவர், கடந்த மாதம் 12ஆம் தேதி இரவில் தனியாக நடந்து வந்து கொண்டிருந்த பொழுது பைக்கில் வந்த இருவர், கத்தியை காட்டி மிரட்டி கடத்தி சென்று திருப்பெரும்புதூர் அருகே உள்ள வடமங்கலம் காட்டுப்பகுதியில் கூட்டு பாலியல் செய்துவிட்டு தப்பியோடியதாக காவலன் செயலில் புகார் அளித்திருந்தார்.

மேலும் அதேபோன்று திருப்பெரும்புதூர் காவல் நிலையத்தில் நான்கு புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மற்றும் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகளும்,பாலியல் வழக்குகளின் புகார்கள் இதுபோன்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக காவல்துறையினரின் வலையில் சிக்காத குற்றவாளிகள், கடந்த சில நாட்கள் முன்பு சிக்கியபோது தனது இரு சக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

தை தொடர்ந்து நேற்று முன் தினம் திருப்பெரும்புதூர் அருகே காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது சந்தேகப்படும்படியாக இருவரை மடக்கி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தநிலையில், உடனே திருப்பெரும்புதூர் காவல்துறையினர் இருவரையும் திருப்பெரும்புதூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், இருவரும் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த நாகராஜ் மற்றும் பிரகாஷ் என தெரியவந்தது.

கடந்த 12ஆம் தேதி இளம் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தது இவர்கள்தான் என அதிர்ச்சி தகவலும் கிடைக்கப்பெற்றது. இந்நிலையில் அவர்கள் இருவரையும் தொடர் விசாரணையில் விசாரித்தபோது, இதுவரை 11 பெண்களை கூட்டு பாலியல் செய்ததாக கூறினர்.

அதைத் தொடர்ந்து இவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை கைப்பற்றுவதற்காக காஞ்சிபுரம் அருகே மேல்கதிர்பூர் தைலம் தோப்பு பகுதிக்கு காவல் துறையினர் இவர்களை அழைத்துச் சென்றுள்ளனர். அப்பொழுது தைலந்தோப்பில் உள்ள ஒரு பைக் கவரில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி எடுத்து போலீசாரை சுட முயற்சித்த போது, சுதாரித்துக் கொண்ட காவலர்கள் நாகராஜின் கால் பகுதியில் சுட்டு பிடித்தனர். மேலும் தப்பி ஓடிய பிரகாசை துரத்தி சென்ற பொழுது கீழே விழுந்ததில் பிரகாஷின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இருவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது, இவர்கள் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு போலிஸார் பாதுகாப்புடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து அவசர ஊர்தியில் அழைத்துச் சென்று உள்ளனர்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 469

    0

    0