அண்ணா சிலைக்கு செருப்பு மாலை அணிவிப்பு : ஆ. ராசா புகைப்படத்துடன் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அவமதிப்பு..!!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2022, 11:57 am

விழுப்புரம் அருகே அண்ணா சிலையை அவமதிப்பு செய்து அவரது சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த மர்ம நபர்கள் எம் பி அ. ராசாவின் உருவப்படத்திற்கு  கரும்புள்ளி செம்புள்ளி  குத்திய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா சிலை அமைந்துள்ளது. இந்த சிலை மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்தும் ஆ. ராசாவின் உருவப்படத்திற்கு செம்புள்ளி கரும்புள்ளி வைத்து அவரது உருவப்படத்துடன் அண்ணா சிலை மீது மாட்டி விட்டு அண்ணாவின் தலை பகுதியில் திமுக கட்சி கொடியை கொண்டு மூடிவிட்டு சென்றுள்ளனர்.


அதிகாலையில் அண்ணா சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து இருப்பதை கண்ட அப்பகுதியினர் கண்டமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் விரைந்து சென்ற போலீசார் அண்ணா சிலை மீது இருந்த செருப்பு மாலையையும் ஆ. ராசாவின் புகைப்படத்தினை அகற்றினர்.

இதனை தொடர்ந்து கண்டமங்கலம் போலீசார் அண்ணா சிலையை அவமதிக்கும் விதமாக செருப்பு மாலை அணிவித்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரனை செய்து வருகின்றனர்.

விழுப்புரம் புதுச்சேரி செல்லக்கூடிய முக்கிய சாலையான கண்டமங்கலம் பகுதியில் அமைந்துள்ள அண்னா சிலையை அவதித்த சம்பவம்  பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 989

    0

    0