ஆடியோ விவகாரத்தில் சூர்யா சிவா, டெய்சி சமாதானம் : ஒரே ஒரு வார்த்தையில் காயத்ரி ரகுராம் பதில்!!
Author: Udayachandran RadhaKrishnan24 November 2022, 9:14 pm
பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி சரணை ஓபிசி மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிவா மோசமாக விமர்சித்திருந்தார். அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் பாஜக அலுவலகத்தில் கனகசபாபதி முன்னிலையில் இருவரும் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில் இருவரும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது இந்த விவகாரத்தை பெரிதுப்படுத்தாமல் சுமுகமாக முடித்துக் கொள்ள விரும்புகிறோம் என்றனர்.
இருவரும் அக்கா தம்பி என கூறிக் கொண்டனர். என்னதான் சமாதானமாக போவதாக அறிவித்தாலும் அத்தனை ஆபாச வார்த்தைகளால் ஒரு பெண்ணை அர்ச்சனை செய்துவிட்டு எந்தவித நடவடிக்கைக்கும் உள்ளாமல் திருச்சி சூர்யா சிவா காப்பாற்றப்பட்டதாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: துச்சாதனன் வென்றார் என குறிப்பிட்டுள்ளார்.