மன்சூர் அலிகான் விவகாரத்தில் சேரி எனக் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை குஷ்புக்கு பிரபல நடிகை பதிலடி கொடுத்துள்ளார்.
மணிப்பூர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று திமுக ஆதரவாளர் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்த நிலையில், சேரி மொழியில் தன்னால் பேச முடியாது என்று குஷ்பு பதிலளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை த்ரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகானுக்கு எதிராக நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு கடுமையான கருத்து தெரிவித்து இருந்தார். அவரது இந்தப் பதிவுக்கு எதிராக கேள்வி எழுப்பிய சில நெட்டிசன்கள், மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது குறித்து எந்தக் கருத்து தெரிவிக்காத நீங்கள், மன்சூர் அலிகான் விவகாரத்திற்கு மட்டும் கருத்து தெரிவிப்பதா என கேள்வி எழுப்பியிருந்தனர்.
மேலும், அவரது டுவிட்டை சுட்டிக்காட்டிய திமுக ஆதரவு நெட்டிசன் ஒருவர், திமுகவினர் சேரி மொழி பேசுவதாக குஷ்பு சர்ச்சை கருத்தை பதிவிட்டிருந்ததாக குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் பூதாகரமானது. குஷ்புவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும், சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தி தலித் மக்களை இழிவுபடுத்தியதாகக் கூறி, நடிகை குஷ்பு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீலம் பண்பாட்டு மையம் அமைப்பினர் மற்றும் நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், சேரி என்னும் வார்த்தை பிரஞ்ச் மொழியில் அன்பு எனும் அர்த்தத்தைக் கொண்டது என்றும், அந்த அர்த்தத்தில் தான் இந்தப் பதிவை தான் போட்டதாகவும் குஷ்பு விளக்கமளித்திருந்தார். ஒரு குறிப்பிட்ட கூட்டம் தனது டுவிட்டை தனக்கு எதிராக இந்த விவகாரத்தை கிளப்பி விடுவதாகக் கூறிய அவர், இது தொடர்பாக குறைந்தபட்ச கல்வி அறிவையாவது பெற்றிருக்க வேண்டும் என்று கூறினார். மேலும், உங்களின் கீழ்த்தரமான எண்ணங்களினால் இந்த விவகாரத்தில் 2 நிமிடம் புகழை பெற முயற்சிப்பீர்கள் அல்லது இது பற்றி எனது பதிலை எதிர்பார்த்திருப்பீர்கள்..? ஆனால், மன்னிக்கவும், அதற்கு நீங்கள் தகுதியானவர்கள் அல்ல, என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்தப் பதிவுக்கு முன்னாள் பாஜக நிர்வாகியும், நடிகையும் காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார். ரேப் என்றால் தெலுங்கில் நாளை என்றும் அர்த்தம் என்றும், மன்சூர் அலிகான் விவகாரத்தில் நீங்கள் எந்த அர்த்தத்தில் கூறினீர்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், தனது தவறை உணர்ந்து பொதுவெளியில் மன்னிப்பு கேட்டு செல்வதை தவிர்த்து விட்டு, புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டாம் எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.