‘உன்னை ப்ளாக்மெயில் செய்தேன்-னு அழுதாயா..?’.. அண்ணாமலையை மீண்டும் வம்புக்கு இழுக்கும் காயத்ரி ரகுராம்!!

Author: Babu Lakshmanan
6 April 2023, 9:41 pm

தன் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், மாநில தலைவர் அண்ணாமலையை நடிகை காயத்ரி ரகுராம் மீண்டும் வம்புக்கு இழுந்துள்ள சம்பவம் அக்கட்சியினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் கட்சி வலுப்பெற்று வருவதாக எதிர்கட்சியினரே கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு அவரது செயல்பாடுகள் இருப்பதாக கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், அண்ணாமலையின் செயல்பாடுகளை விமர்சித்து கட்சியில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர்.

அதுபோன்று வெளியேறியவர்தான் பிரபல நடிகை காயத்ரி ரகுராம். பாஜகவில் இருந்து வெளியேறியது முதல் அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்களை சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இதனிடையே, காயத்ரி ரகுராம் மீது சார்பில் உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், தமிழக பாஜக துணைத் தலைவருமான ஜிஎஸ் மணி சார்பில் சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சமூக வலைதளத்தில் தொடர்ந்து அவதூறு கருத்து பரப்பி வரும் காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர்.

BJP - Updatenews360

இந்த நிலையில், தன் மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து காயத்ரி ரகுராம் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்த பதிவில் கூறியிருப்பதாவது:- அண்ணாமலை, நான் உன்னை துஷ்பிரயோகம் செய்தேன், மிரட்டுகிறேன், உன்னை பிளாக்மெயில் செய்தேன் என்று ஜிஎஸ் மணி அவர்களிடம் அழுதாயா?, நான் எப்போது செய்தேன்? உங்கள் நகைச்சுவை கருத்துக்களுக்காக நான் சிரித்துவிட்டு என் நகைச்சுவை கருத்துகளை தெரிவித்தேன். அவ்வளவுதான்.. ஏன் இவ்வளவு சீரியஸ் அண்ணாமலை? நீயும் சினிமா துறையைப் பற்றி பேசியுள்ளீர்கள்.. கருத்து சுதந்திரம் தானே.. கோச்சிக்க கூடாது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Director Rv Udayakumar Talked About Vijay Politics Entryஇது மட்டும் இல்லைனா விஜய் கட்சியே ஆரம்பித்திருக்க முடியாது : புயலை கிளப்பிய இயக்குநர்!