காதலியுடன் பலமுறை கசமுசா.. தொழிலதிபர் மகளுடன் நிச்சயம் : போக்சோவில் தேடப்பட்டு வந்த இளைஞர் சடலமாக மீட்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
8 March 2023, 10:17 am

சென்னை மதுரவாயல் மகளிர் காவல் நிலையத்தில் 27 வயதான பெண் ஒருவர் தனது வழக்கறிஞர்களுடன் சென்று பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகாரில், நான் 10ம் வகுப்பு படிக்கும் போது எனக்கு நிஷாந்த் என்ற ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னை காதலிப்பதாக கூறினார்.

இருவரும் பள்ளியில் படிக்கும் போதே காதலிக்க தொடங்கினோம். அதன் பின்னர் கல்லூரியில் படிக்க தொடங்கிய பின்னரும் எங்கள் காதல் தொடர்ந்தது.

என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை என்னிடம் தவறாக நடந்து கொண்டார். எனது பூர்வீக சொத்தை விற்று வந்த பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பணம் கேட்டு வாங்கினார்.

இப்படியாக என்னிடம் ரூ.68 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டார். ஆனால் என்னை திருமணம் செய்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார். நான் பலமுறை கேட்டும் திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்தார். பலமுறை அவருடன் உல்லாசமாக இருந்துள்ளேன்.

என்ன காரணம் என்று நான் விசாரித்த போது, என்னிடம் பணத்தை ஏமாற்றிய நிஷாந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முக்கியப் பொறுப்பில் உள்ள நபரின் மகளை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற தகவல் கிடைத்தது.
எனவே என்னை காதலித்து தவறாக நடந்து கொண்டுவிட்டு, ரூ.68 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றிய காதலன் நிஷாந்த் மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் மதுரவாயல் அனைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே கடந்த 3ம் தேதி வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அதை நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது காதலி புகார் அளித்தார்.

இந்த புகாரை அடுத்து நிஷாந்த்தின் திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடிவந்தனர்.

இதனால் மனஉளைச்சலில் இருந்த நிஷாந்த், 2 நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப் இல் மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில் தான் போரூர் ஏரியில் குதிக்க போவதாக கூறியிருக்கிறார்.

அதன்படி நிஷாந்த் போரூர் ஏரியில் குதித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து விருகம்பாக்கம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து பாலசந்திரன் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நிஷாந்தின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் சடலத்தை கைப்பற்றுவது சவாலாக இருந்தது. இதையடுத்து 2 நாட்களுக்கு பின் போரூர் ஏரியில் நிஷாந்த் உடல் கரை ஒதுங்கியது. இதையடுத்து அவரது சடத்தை மீட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர்.

பெண்ணை காதலித்து ஏமாற்றிய இளைஞர் கைதுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Revanth Reddy on Pushpa 2ரேவந்த் ரெட்டியை சந்திக்க தயார்…அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக கிளம்பிய திரையுலகினர்..!
  • Views: - 588

    0

    0