நெல்லையில் தனியார் கல்லூரியின் மாணவர் மன்ற நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை சார்ந்த முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சரும் சட்ட மன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் கலந்துகொண்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவை முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் ஆல் தொடங்கப்பட்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் வழிநடத்தப்பட்டு வரக்கூடிய இயக்கம் என குறிப்பிட்டார்.
தனக்கு அமைச்சர் பதவியே வேண்டாம் என்று கூறியவர் தான் எடப்பாடி பழனிச்சாமி என தெரிவித்தார். ஓ பன்னீர்செல்வத்தின் செயல்பாடு கட்சியில் எப்படி இருந்தது என்பதை நாடறியும் புதிதாக நாங்கள் சொல்லி தெரியப்போவதில்லை என கூறினார்.
ஓ.பன்னீர் செல்வம் புதியதாக ஒரு கட்சியை ஆரம்பித்துள்ளார். அதிமுகவை விட்டு ஏற்கனவே ஓபிஎஸ்சை நீக்கி விட்டோம் அவர் கட்சி தொடங்கி அவர் கட்சிக்கான ஒரு குழுவை அறிவித்துள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சியிடம் ஆதரவு கேட்க வேண்டியது தார்மீக உரிமை, இதன்படி பாஜகவிடம் ஆதரவை கேட்டோம் ஆதரவு கொடுத்தால் சரி , இல்லையென்றால் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக தனது பயணத்தை தொடரும்.
ஜனநாயக ரீதியில் முறைப்படி நாங்கள் உங்களிடம் கூட்டணியில் இருக்கிறோம் என்பதை தெரிவிக்க அவர்களிடம் சென்று பேசியதாக தெரிவித்தார்.
அதிமுகவுடன் கூட்டணிக்கு தயாரா என பாஜகவிடம் கேட்டுள்ளோம் வரவில்லையென்றாலும் சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திப்போம். இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் கிடைக்கும்.
அதிமுகவில் நான்கு அணியும் இல்லை, ஏழு அணியும் இல்லை ஒரே அணி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பின்னால் பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் தொண்டர்கள் உள்ளதாக தளவாய் சுந்தரம் கூறினார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.