தினமும் செய்யற பாவத்தை கடலில் போய் மூழ்கி கழுவிக்கோங்க : திமுகவை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2023, 11:47 am

தினமும் செய்யற பாவத்தை கடலில் போய் மூழ்கி கழுவிக்கோங்க : திமுகவை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்!!

பா.ஜனதாவின் யாத்திரையை பாவ யாத்திரை என்றும் அமித்ஷாவின் மகன் பதவி பெற்றது எப்படி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விமர்சித்தனர்.

இதற்கு பதிலளித்து பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறியதாவது:- என் மண் என் மக்கள் என்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தொடங்கி இருக்கும் யாத்திரை மக்கள் மத்தியில் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும். பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும். பா.ஜனதாவின் வளர்ச்சியையும், எழுச்சியையும் பார்த்து திராவிட மாயையில் இருந்து எங்கே இந்த மண்ணை மீட்டு விடுவார்களோ என்ற கலக்கத்தில் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் பேசுகிறார்கள்.

தமிழ் மண்ணில் தமிழ் மக்களுக்கு அவர்கள் செய்யும் பாவத்தை நினைத்தால் இந்த வார்த்தையை அவர் பயன்படுத்தி இருக்க கூடாது. சட்டம்-ஒழுங்கில் தொடங்கி டாஸ்மாக் கடைகளால் தினமும் எத்தனையோ பெண்களின் தாலி பறிக்கப்படுகிறது.

இந்த பாவங்களுக்காக அவர்கள் பாவ கடலில்தான் மூழ்கி எழ வேண்டும். செந்தில்பாலாஜி குற்றம் சாட்டப்பட்டவர் தானே என்று நியாயப்படுத்த முயற்சிக்கிறார் முதலமைச்சர். அவர் மீதான குற்றங்களுக்கு முகாந்திரம் இருப்பதாக கோர்ட்டே அறிவித்து இருக்கிறது.

அப்படிப்பட்டவரை எப்படி மந்திரி பதவியில் நீடிக்க விடலாம். தான் தேர்தலில் போட்டியிட்டுத்தான் இந்த பதவியை பெற்றதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டு அமித்ஷாவின் மகனை ஒப்பிட்டு பேசி இருக்கிறார். முதலில் இந்த ஒப்பீடே சரியில்லாதது.

தேர்தலில் போட்டியிட்டால் மக்களை சந்திக்கத்தான் வேண்டும். அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவும் கிரிக்கெட் வாரியத்தில் நடத்தப்பட்ட தேர்தலில் உறுப்பினர்கள் வாக்களித்துதான் வெற்றி பெற்றுள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டு தெரிந்தால்தான் தலைவர் பதவிக்கு வர வேண்டு மென்றால் உதயநிதி ஸ்டாலின் என்னென்ன விளையாட்டு, விளையாடினார்? சினிமாவில் மட்டும் விளையாடி இருப்பார். பா.ஜனதாவை அமைப்பு ரீதியாக பலப்படுத்தி வருகிறோம். தி.மு.க.வினரின் மயக்கும் வித்தைகள் இனி மேல் மக்கள் மத்தியில் எடுபடாது. இவ்வாறு அவர் கூறினார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 336

    0

    0