தாறுமாறாக உயரும் தங்கம் விலை.. ஒரே நாளில் உச்சம்!

Author: Hariharasudhan
18 October 2024, 12:02 pm

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.80 உயர்ந்து 7,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: உலகின் மத்திய கிழக்கு பகுதிகளில் அதிகரித்த புவிசார் அரசியல் பதற்றம், வல்லரசு நாடுகளில் நிலவும் பொருளாதார நிலை மற்றும் சர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கிகளின் நாணய கொள்கைகள் ஆகியவை காரணமாக தங்கம் இன்று ஒரே நாளில் உச்சம் தொட்டுள்ளது. குறிப்பாக, ஐரோப்பிய மத்திய வங்கி நேற்று அறிவித்த வட்டி குறைப்பு தங்கம் விலை திடீரென உயர்ந்ததற்கு காரணம் ஆகும்.

இதன்படி, இன்று (அக்.18) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 57 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, பவுனுக்கு 640 ரூபாய் உயர்ந்துள்ளது.

Today Gold Price - Update News 360

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 695 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 61 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார்.. யார் இந்த யாஹ்யா சின்வர்?

மேலும், வெள்ளி ஒரு கிராம் 2 ரூபாய் உயர்ந்து 105 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 661

    0

    0