கிளம்பிட்டாயா.. கிளம்பிட்டா :மாத ஆரம்பத்திலேயே அதிரடி காட்டிய தங்கம் விலை!

Author: Sudha
1 August 2024, 11:41 am

அண்மையில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து, சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் நேற்றும் இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது.கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இன்று 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 6,430 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 51,440 ரூபாய்க்கும் விற்பனையாகிறது

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5267 ரூபாய்க்கும், சவரனுக்கு 64 உயர்ந்து ஒரு சவரன் 42,136 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் 91.70 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 91,700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!