போக்கு காட்டும் தங்கம் விலை: இன்று மீண்டும் உயர்வு: பவுனுக்கு இவ்வளவா..!?

Author: Sudha
8 ஆகஸ்ட் 2024, 11:11 காலை
Quick Share

தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கத்தின் விலையில் ஏற்றமும் இறக்கமும் மாறி மாறி இருக்கிறது.

அந்த வகையில் நேற்று ஆகஸ்ட் 7 ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 70 ரூபாயும், சவரனுக்கு 560 ரூபாய் குறைந்தது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன் படி இன்று ஆகஸ்ட் 8 ஆம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 6350க்கும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 50,800 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் 86.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ 86,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Divorce விவாகரத்து வழக்கில் டுவிஸ்ட்.. ‘ஓ மை கடவுளே’ பட பாணியில் கோர்ட்டில் நடந்த சம்பவம்!!
  • Views: - 209

    0

    0