இப்ப இல்லனா எப்பவும் கிடைக்காது… 2வது நாளாக மளமளவென குறைந்த தங்கம் விலை.. ரூ.43 ஆயிரத்திற்கு கீழ் சரிவு..!!

Author: Babu Lakshmanan
4 February 2023, 10:21 am
Quick Share

பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்வதுதான். உதாரணமாக கடந்த ஆண்டு ரஷியா – உக்ரைன் போர் நடந்தபோது, பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது.

அதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. அதாவது தங்கத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்து, இல்லத்தரசிகளை அதிர வைத்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கடந்த மாதம் (ஜனவரி) 1-ந்தேதி, ரூ.41 ஆயிரத்தை கடந்த ஒரு பவுன் தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.

ரூ.42 ஆயிரம், ரூ.43 ஆயிரம் என்று புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை (ஒரு பவுன்) உயர்ந்தது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில், தங்கத்திற்கான இறக்குமதி வரியில் மாற்றம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியதால், கடந்த மாதம் 29, 30-ந்தேதிகளில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதற்கு அடுத்த நாள் (31-ந் தேதி) தங்கம் விலை சற்று குறைந்தது.

இந்த சாதனை நேற்று முன்தினம் முறியடிக்கப்பட்டு, தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.44 ஆயிரத்தை தாண்டியது. அதாவது பவுன் ரூ.44 ஆயிரத்து 40-க்கும், ஒரு கிராம் ரூ.5,505-க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையும் ஒரு கிராம் ரூ.77.80 ஆக உயர்ந்து புதிய உச்சம் தொட்டது.

Gold Rate - Updatenews360

பின்னர், நேற்று சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 720 ரூபாய் குறைந்து 43, 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.5,415க்கு விற்பனையானது.

இந்த நிலையில், 2வது நாளாக இன்றும் தங்கத்தின் விலை சரிந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து 42,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.5,335க்கு விற்பனையானது. நேற்று ரூ.720 குறைந்த நிலையில் இன்று ரூ.640 சரிந்திருப்பதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேபோல, வெள்ளி விலை ரூ.1400 குறைந்து ரூ.76,400க்கு விற்பனையாகிறது.

  • sarathkumar latest news நடுரோட்டிற்கு வந்த சரத்குமார்…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..
  • Views: - 387

    0

    0