பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்வதுதான். உதாரணமாக கடந்த ஆண்டு ரஷியா – உக்ரைன் போர் நடந்தபோது, பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது.
அதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. அதாவது தங்கத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்து, இல்லத்தரசிகளை அதிர வைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கடந்த ஜனவரி 1-ந்தேதி, ரூ.41 ஆயிரத்தை கடந்த ஒரு பவுன் தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.
ரூ.44 ஆயிரம், ரூ.45 ஆயிரம் என்று புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை (ஒரு பவுன்) உயர்ந்தது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில், தங்கத்திற்கான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டது. இதனால், தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும், தங்கம் விலை உயர்ந்தும், சரிந்தும் காணப்பட்டது.
கடந்த மாதத்தில் பெரும்பாலும் உயர்ந்தே காணப்பட்ட தங்கத்தின் விலை, ஏப்ரல் மாதத்தின் முதல் நாளில் இருந்தே சற்று சரிந்து வந்தது. ஆனால், போகப் போக புதிய உச்சத்தை எட்டி வந்தது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மளமளவென சரிந்துள்ளது. அதாவது சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.44,840க்கும், கிராமுக்கு ரூ.60 சரிந்து ரூ.5,665க்கும் விற்பனையாகிறது. இதன்மூலம் மீண்டும் தங்கம் ரூ.45 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
அதேபோல, சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசுகள் குறைந்து ரூ.80.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம், இன்றும், நாளையும் அட்சய திருதியை கொண்டாடப்பட உள்ள நிலையில், தங்கம் விலை குறைந்திருப்பது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கணவரை இழந்த நடிகைகளை குறி வைத்து அவர்களுடன் சில பல நாட்கள் பழகி கழட்டி விடுவதே இந்த பிரபல நடிகரின்…
இந்தியாவை ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் மாற்ற வேண்டும் எனும் முயற்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது…
பாஜக, தமிழுக்கு எதிராக செயல்படுவது போல் தோற்றம் உருவாக்கப்படுகிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்:…
லைகா நிறுவனம் தமிழ் சினிமாவை கத்தி படம் மூலம் தயாரிக்க ஆரம்பித்தது. அந்த படம் லைகா நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை…
பள்ளிகளில் ஆங்கிலமும் குறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும் என திமுக கொள்கை வைத்துள்ளதாக பாஜகவின் ராம சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி:…
பாஜகவின் கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து…
This website uses cookies.