சரிவில் சென்றது;மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை; இன்னும் என்னென்ன மாற்றங்கள் வரும்?

Author: Sudha
27 July 2024, 10:41 am

கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தங்கம் மீதான இறக்குமதி வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக, அன்றைய தினமே தங்கத்தின் விலை குறைந்தது.கடந்த 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 3,160 வரை குறைந்தது.

இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்தது.1 கிராம் தங்கம் 6,465 ரூபாயாகவும் ஒரு சவரன் 51,720 ரூபாயாகவும் உள்ளது.

நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் “கோவை நகரில் மட்டும் ஆண்டுக்கு 100 டன் வரை தங்க நகை உற்பத்தி செய்யப்படுகிறது. தங்க நகை தொழிலில் கோவையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1 லட்சம் பேர் வரைக்கும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். எனவும் தினமும் 100 கிலோ அளவிலான வணிகம் நடைபெறுவது வழக்கம்.

இறக்குமதி வரி 9 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதால், தங்கத்தின் விலை இனி வரும் நாட்களில் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது மக்களுக்கு மட்டுமின்றி இத்தொழிலில் உள்ள அனைவருக்கும் மிகுந்த பயன்தரும். நவீன டிசைன்கள் கொண்ட நகைகள், பழங்கால டிசைன் (ஆன்டிக்) என அனைத்து வகை தங்க நகைகள் தயாரிப்பில் கோவை சிறந்து விளங்குவதால் தங்க நகை தொழிலில் கோவை மிக சிறப்பான வளர்ச்சி பெறும்” என்றார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?