தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. எவ்வளவு தெரியுமா? இன்றைய விலை நிலவரம்!

Author: Sudha
26 ஜூலை 2024, 11:36 காலை
Quick Share

மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்கவரியை 6 சதவீதம் குறைத்து மத்திய அரசு அறிவித்தது.இந்த வரிக் குறைப்பை அடுத்து தங்கம் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.இதனால் தங்கத்தை வாங்க இல்லத்தரசிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நேற்று தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.இந்நிலையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமிற்கு 15 ரூபாய் குறைந்து கிராம் 6415 க்கும் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 51,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேப் போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு12 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5255 ரூபாய்க்கும், சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 42,040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு,63 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 6752 ரூபாய்க்கும், சவரனுக்கு 504 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 54,016 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் 89 ரூபாய்க்கும் ஒரு கிலோ 89,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Pawan ஏழுமலையான் கோவிலில் பவன் கல்யான்… தனது மகள்களுடன் சிறப்பு வழிபாடு..!!
  • Views: - 97

    0

    0